Breaking News

தலைவர் பிரபாவிற்கு பிறகு காலத்தின் பதிவே விக்கினேஸ்வரன் -சிறீதரன்(காணொளி)

2015ஆம் ஆண்டு செப்தம்பர் மாதத்தில் ஐநா மனித
உரிமைப் பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய கருத்துரைகளும் கலந்துரையாடல்களும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கருத்துரைகளை பேராசிரியர் சந்திரகாந்தன் சிறீதரன் சிவஞானம், M.P. (யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) விசுவநாதன் உருத்ரகுமாரன்- (பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்) ஸ்கைப் வழியாக உரையாற்றினார்.

தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ் உறவுகள் பெருமளவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு கருத்துரை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிடுகையில்,

யாழ்ப்பாணத்தில் மாத்திரம் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் 320000 வாக்குகளை பெற்றிருக்கின்றார் ஆனால் யாழ்,கிளி மாவட்டங்களை உள்ளடக்கிய கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் எவராலும் 72,000 வாக்குகளிற்கு மேற் செல்லமுடியவில்லை.

எனவே அவர் ஒரு காலத்தின் பதிவாகவே தந்தை செல்வாவிற்கு பிறகு,தலைவர் பிரபாகரனுக்கு பின்னர் ஒரு இறையருள் கூடிய ஒருவராகவே அங்குள்ள மக்கள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை நோக்குகின்றனர் எனவும் தெரிவித்தார்.

அரசியல் நகர்வுகள் என்பது உண்மையில் ஆயுதம் தாங்கி போராகவும், போர் என்பது ஆயுதம் தாங்கி ஒரு அரசியலாகவுமே காணப்படும் சூழலில் நாம் ஆயுதம் இல்லாத யுத்தத்திற்குள் அரசியல் நடத்துகின்றோம். இதுவே இன்றைய களச்சூழல் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 


கனடாவில் உள்ள புலம் பெயர் தமிழர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புலம்பெயர் நாடுகளின் உள்ள உறவுகளை, தமிழ் அமைப்புக்களை, உடைத்தல் என்ற பணியை ஒருவகையில் கையாளும் அரசாங்கம், மற்றையது நிலத்தில் உள்ள தமிழர்களின் கட்டுக்கோப்பையும், அங்குள்ள அமைப்புக்களையும் உடைத்து, அவர்களை சிதறச்செய்தல் என இந்த இரண்டு காரியங்களையும், இவர்கள் ஆற்றுகின்ற பொழுது எங்களின் பலம், கனதி என்பன குறையும். 

இது குறைந்து கொண்டு போனால் எங்கள் நிலைமை மோசமாகமாறும் எனவும் அவர் தெரிவித்தார். திசை திருப்பலையும் அரசாங்கம் மிகச் சிறப்பாக செய்யும் என்றும் குறிப்பிட்டார். 

இது தொடர்பாக அவரின் முழுமையான உரையாடலும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

திரு.ருத்திகுமாரன் ஸ்கைப் மூலம் உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார்: 

“இலங்கையில் தமிழினத்துக்கு ஏற்பட்ட அரசியல் கொடுமைகள் சம்பந்தமாக விசாரணை நடாத்தப் பட வேண்டுமெனக் கோரி நான்கு மில்லியன் மக்கள் கையெழுத்து இட்டுள்ளார்கள். யூ.என்.ஓ. மூலம் அதனை செயற்படுத்துவதற்கு ஒரு குழுவினை அமைத்துள்ளோம். இங்கிலாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றினை ஏற்படுத்தி உள்ளோம். 

இவர்கள் அனைவரும் ஐ.நா. சபையில் பங்கு பற்றிய அனுப வம் உடையோராவர். இக்குழுவின் மூலம் எவ்வாறு விசாரணையை மேற் கொள்ளலாம் என்பது பற்றி நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம். அதற்கு சர்வதேச தரத்தில் மனித உரிமை சாசன உண்மைகள், சாட் சியங்கள் அவசியம். மனித உரிமைகளை பாதுகாப்பதன் மூலம் சர்வதேச உறவை வலுப்படுத்தவே சர்வதேச சட்டம் உருவாக்கப்பட்டது. 

தற்போது மனித உரிமைகளு க்கு ஆதரவளிக்க ஓரு நாட்டை நாம் தெரிவு செய் தால் அந்நாடு இதனை யூ.என்.ஓ.வில் வலியுறுத்த முடியும். இலங்கையில் நடந்தது இனப் படுகொலை தான் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். இதற்கு நாம் சர்வ தேச நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம். “தமிழ்” என்ற சொல்லையே ஸ்ரீலங்கா அரசு பயன்படுத்துவதில்லை. “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற சொல்லை மாத்திரம் பயன்படுத்தி வருகின்றது. இதுபற்றி எதிர்வரும் டிசம்பர் மாதம் சர்வதேச சட்டத்தரணிகள் சிலர் சேர்ந்து கலந்து ஆலோசிக்க உள்ளோம்”;














.

கேள்வி பதில் நிகழ்வு காணொளி மேலே