Breaking News

தந்தையின் புதிய கட்சியில் இணைவேன் -நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புதிய கட்சி ஒன்று உருவாக்கப்படும் பட்சத்தில் அந்த கட்சியில் தானும் இணைந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ஷ இன்று(புதன்கிழமை) அழைக்கப்பட்டிருந்தார்.இந்தநிலையில் இதன்போது ஊடகவியலாளர்களினால் எழுப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், புதிய கட்சி ஒன்றினை உருவாக்கும் எண்ணம் எனது தந்தையான ம ஹிந்தவிற்கு கிடையாது. இருப்பினும் அவரினால் புதிய கட்சி ஒன்று உருவாக்கப்படும் பட்சத்தில் அந்த கட்சியில் முதல் நபராக இணைந்து கொள்வேன்.

நல்லாட்சிக்கான அரசாங்கம் என தற்போது மார்தட்டிக்கொள்ளும் இந்த அரசாங்கமானது தேர்தல் காலத்தில் அதிகளவான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தது.எனினும் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை இதுவரையில் நிறைவேற்றவில்லை. மாறாக பழிவாங்கும் வகையிலான செயற்பாடுகளை இன்று வரை முன்னெடுத்து வருகின்றது.

எது எவ்வாறு இருந்தாலும் வலுவான தொரு எதிர்கட்சி என்ற வகையில் அரசாங்கத்திற்கெதிராக தொடர்ந்தும் போராட்டகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.