இன்றைய வானிலை முன்னறிவித்தல்!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்''
அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை
மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கொழும்பு - அடிக்கடி மழை பெய்யும்
காலி - அடிக்கடி மழை பெய்யும்
யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை
கண்டி - அடிக்கடி மழை பெய்யும்
நுவரெலியா - அடிக்கடி மழை பெய்யும்
இரத்தினபுரி - அடிக்கடி மழை பெய்யும்
திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை
மன்னார் - பிரதானமாக சீரான வானிலை