Breaking News

விடுதலையை விலைபேசும் சுமந்திரன் ? -பாகம்-1 (காணொளி)


ஈழத்தமிழர்களின் தியாகத்தின் மேல் நிலைநிறுத்தப்படவேண்டிய அரசியல் செல்நெறியை மடைமாற்றி, ஈழத்தமிழர்களை இயலாதவர்களாக, தோல்வியுற்றவர்களாக தமது இறைமையை கோருவதற்கு தகுதியற்றவர்களாக நிறுவுவதில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆபத்தான நகர்வுகள் பற்றி தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டியது அவசியமாகும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்பது அதன் வழிநடத்தலில் சுத்துமாத்துகளின் கலவையாக இருப்பதை அனைவரும் எளிதாக புரிந்துகொள்ளமுடியாது. 

அதனால்தான் அதன் உத்தியோகப்பற்ற தலைவராக தன்னை நிலைப்படுத்தியவாறு தமிழர் பிரதிநிதியாக கடந்த 13 ஆண்டுகளில் செயற்படும் ஒருவர் எவ்வாறு தமிழர் அரசியல் செல்நெறியை மடைமாற்றுகின்றார் என்பதை கவனத்தில்கொள்வதன் ஊடாக ஒட்டுமொத்த தமிழ்த்தேசியக்ககூட்டமைப்பின் பாதை தேங்கிகிடக்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

ஈழத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பாக மக்களால் தெரிவுசெய்யப்படாது 2010ஆண்டு நேரடியாக சம்பந்தனால் கொண்டுவரப்பட்ட சின்ன கதிர்காமர் என வர்ணிக்கப்படும் சுமந்திரன் என்ற ஒரு அரசியல்வாதியின் வரவு அவரது நீதித்துறை சார் நுட்பங்கள் ஊடாக தமிழருக்கு சார்பான மாற்றங்களை கொண்டு வந்திருக்க முடியும். 

2009 இல் போர் மௌனிக்கப்பட்ட பின் திரு சுமந்திரன் என்னும் ஒற்றை மனிதனால் சாணக்கியம் என்ற பெயரில் தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தையே சிங்கள தேசத்திடம் அடகு வைக்கும் காரியங்கள் முனைப்பு பெற்றதே நிதர்சனமாக இருக்கின்றது.

   

மேலுள்ள பதிவின் ஒலி வடிவம்


இதற்கு முதல் ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறோம். 

2004ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பெருவிருப்பை உலகிற்கு அரசியல் வழியில் வெளிப்படுத்துவதற்கு ஒரு கட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தேவைப்பட்டது. அந்தவகையிலேயே அரசியல் ரீதியாக பிரிந்து கிடந்த கட்சிகளை ஒருகுடையின் கீழ் கொண்டு வந்து த.தே.கூட்டமைப்பு என்ற ஒரு மாபெரும் அரசியல் அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் எமது தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள். 


அதன் ஆரம்ப உருவாக்கத்தின்போது விடுதலைப் புலிகளால் நேரடியாக சிபார்சு செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பெண்கள் சார்பில் விரிவுரையாளராக இருந்த பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர், இந்த மூவருமே அப்போதைய (2004) தேர்தலிலும் அதிகப்படியான முதன் மூன்று விருப்பு வாக்குகளையும் பெற்று தெரிவாகியிருந்தனர். 



கஜேந்திரகுமார் வெளியேற்றப்பட்டது இந்தியா பின்னணி 1.20 நிமிடத்தில்

   

ஆனால் 2009 போர் மௌனிக்கப்பட்டபின் 2010 இல் முதலாவது தேர்தலை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்கொள்வதற்கு முன்னரேயே விடுதலைப்புலிகளின் நம்பிக்கைக்கும், கொள்கைக்கும் மிக நேர்த்தியாக இறுதிவரை செயற்பட்ட கஜேந்திரகுமார், கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகிய மூவரும் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு அதே தேர்தலில் போட்டியின்றி தேசியப்பட்டியல் மூலமாக சம்பந்தனால் உள்நுழைக்கப்பட்டவரே இந்த சுமந்திரன் எனும் அரசியல்வாதியாவார். இவ்வாறு உள்ளே வந்த சுமந்திரன் என்ற தனிநபரால் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட முக்கியமான சில விடயங்களை ஆதாரங்களோடு பார்ப்போம். 

 👷முதலாவது 

சுமந்திரன் 2012 இல் ஜெனிவா சென்று தமிழர் சார்பாக நீதிகோர முடியாது என்றும், நாங்கள் தமிழர் தரப்பாக தமிழர்களுக்காக வாதாட முடியும் ஆனால், சிறிலங்காவுக்கு எதிராக எந்த தீர்மானமும் கொண்டுவரப்படுவதை நாம் விரும்பவில்லை ஏனென்றால் நாங்கள் சிறிலங்கன் என்றார். அதாவது We can canvas to certain positions but we don’t want anything against Sri Lanka இவ்வாறு ஆங்கிலத்தில் சிங்கள ஊடகமொன்றிற்கு பேட்டியளிக்கும்போது தெரிவித்திருந்தார். 

 

 👷இரண்டாவது

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்தி அதிலுள்ளவர்களுடனும் முரண்நிலைகளை உருவாக்கி அதன் மூலம் மக்களை நம்பிக்கையிழக்க செய்வதன் மூலம் தமிழர் தரப்பு திரட்சியை சிதைவடையச் செய்வதில் சுமந்திரன் மிகவும் காத்திரமாக செயற்பட்டு வருகின்றார். 

த.தே.கூட்டமைப்பில் பேச்சாளராக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோரை - அவர்கள் தமிழ்த்தேசியம் கதைக்கின்றார்கள் என்ற நிலை இருந்தது என்ற காரணத்திற்காக - ஓரங்கட்டியதோடு அதே எதிர்பார்ப்பை வைத்திருந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தேர்தலில் வெல்லமுடியாதவாறு அவருக்கெதிரான பிரச்சாரங்களை தனது ஆதரவாளர்களூடாக செய்ததோடு கட்சியின் அடுத்த கட்ட தலைமையை கைப்பற்றும் திட்டத்தையும் அரங்கேற்றியதோடு தேர்தல் முடிவடைந்ததும் கட்சி தலைமையை ஏற்க தயார் எனவும் பேட்டி கொடுத்திருந்தார்.


  சுமந்திரனின் கூட்டத்தில் மாவையை விமர்சித்த வித்தியாதரன்


தலைமைப் பதவி குறித்த கேள்விகளுக்கு சுமந்திரனின் பதில்

தமிழரசு கட்சி தலைமை கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன்-சிறிதரன்  

இதேபோல முதலாவது வட மாகாணசபையை உரியவாறு செயற்படாமல் பல தடங்கல்களை ஏற்படுத்தியது மாத்திரமன்றி முதலமைச்சரையே அவரது பதவியிலிருந்து நீங்குவதற்கு தனது கையாட்கள் ஊடாக நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டுவந்து அந்த சபையையே கொண்டு செல்ல முடியாதவாறு முட்டுக்கட்டைகளை போட்டிருந்தார். 

வடமாகாணசபையில் சிங்கள உறுப்பினர்களை அழைத்து அமைச்சு பதவி தருவதாக சொல்லி முதலமைச்சருக்கு எதிராக செயற்பட வைத்தமையை ரெலோ உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் உறுதிப்படுத்தினார்.

   

 முதலமைச்சரை நீக்கும் திட்டத்தை விளக்கிய சுமந்திரனின் வலது கரம் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் 

   

சுமந்திரனின் அணி செய்த காரியங்கள் தொடர்பில் சிறிதரன் விளக்கம்  

மாகாணசபை தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை பெற்ற முதலமைச்சர் மற்றும் அவருக்கு பக்கபலமாக இருந்த முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன், அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் தேவையற்ற காரணங்களை கூறி ஒழுக்காற்று நடவடிக்கை என்ற ரீதியில் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர்.

  என்னை ஜெனிவாவில் பேச சுமந்திரன் அனுமதிக்கவில்லை-அனந்தி  
  ரெலோ கட்சியையும் சிவாஜிலிங்கத்தையும் விமர்சித்தபோது

 

இவ்வாறு கூட்டமைப்பில் இருந்தவர்களை பல கூறுகளாக பிரித்து பலவீனமடையச் செய்ததோடு முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட முதலமைச்சர் நிதியத்தை பெற்றுக்கொடுப்பதற்கு ரணில் அரசில் நிழல் அமைச்சராக இருந்தும் எந்த ஏற்பாட்டையும் செய்திருக்கவில்லை. 

அதே போல தேசியத்திற்கு ஆதரவாக செயற்பட்டவர்களான கட்சியின் உபதலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் மற்றும் இளைஞர் அணி தலைவர் சிவகரன் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

  இளைஞர் அணி தலைவர் சிவகரன் பேசியது  

இதேபோலவே கடந்த தேர்தலில் கூட மும்மொழிகளில் தேர்ச்சியும் சுமந்திரனைவிட பல பயங்கரவாத தடைச்சட்டத்தில்
குற்றம் சாட்டப்பட்டவர்களை தனது வாதத்திறமையால் விடுவித்தவருமான கட்சியின் கொழும்புகிளை தலைவரும் கட்சியின் சட்ட ஆலோசகருமான கே.வி.தவராசா அவர்கள் ஓரம்கட்டப்பட்டு சிறிலங்கா அரசின் இலங்கை மனிதவுரிமை ஆணையாளகராக இருந்த அம்பிகா சற்குணநாதன் முன்நிலைப்படுத்தப்பட்டார். 

 கே.வி.தவராசாவின் ஆதங்கம் 1.20 ஆவது நிமிடத்தில்

 

தமிழரசுக் கட்சி மகளிரணி போர்க்கொடி

 

இது போலவே எல்லை மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் இறுதிப்போரில் சாட்சியாகவும் வெள்ளைக்கொடி விவகாரத்தில் இறுதிவரை புலிகளோடு தொடர்பிலிருந்தவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை கட்சியிலிருந்து ஒதுக்கி தோல்வியடையும் ஒருவரை நியமித்ததன் ஊடாக அம்பாறைக்கான ஆசனத்தை இழக்கச் செய்தார். 

அதேபோல யாழ் மேஜராக சுமந்திரனின் தீவிர ஆதரவாளராக இருந்த ஆனோல்ட் அதே சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியபோது, அவரது மேஜர் பதவிக்கு எதிராக சுமந்திரன் தனது கட்சிக்கு எதிரான மணிவண்ணனை தன்னோடு சேர்த்துக்கொண்டார். அதுவரை காலமும் மணிவண்ணன் மீது வழக்கை தொடுத்து மாநகர சபை அமர்வில் ஒருநாள்கூட கலந்துகொள்ளமுடியாதவாறு  வைத்திருந்த சுமந்திரன், அதே மணிவண்ணன் முன்னணியிலிருந்து வெளியேற்றப்பட்டதும் உடனடியாகவே அவர்மீதான வழக்கினை வாபஸ் பெற்று ஈபிடிபியோடு இணைந்து யாழ் மேஜராக்கியது தனது சுய நலன்களுக்காகவே. 

இங்கு குறிப்பிடப்பட்டவர்கள் மீது எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்த்தேசியம் சார் நிலைப்பாடுகளுக்காகவே அவர்கள் அனைவரும் அந்தந்த காலப்பகுதிகளில் இலக்குவைக்கப்பட்டு, சுமந்திரன் குழுவினரால் திட்டமிட்டு இத்தகைய நாசவேலை முன்னெடுக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டவே இந்த சம்பவங்களை குறிப்பிடுகின்றோம். 

👷மூன்றாவது

தமிழர்கள் மீது திட்டமிட்டு இனப்படுகொலைகள் நடத்தப்பட்டது என்பதை மறைக்கும் விதத்தில் இனவழிப்பு நடைபெற்றதற்கான போதிய சாட்சிகள் இல்லை என தான் ஒரு மூத்த சட்டப்புலமையுள்ளவராக சொல்கின்றேன் என தமிழருக்கான நீதியை மறுதலித்த சுமந்திரன். 

வட மாகாணசபை ஊடாக இனவழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அது இப்போது தேவையில்லாத ஒன்று எனவும் கூறியதோடு கனடாவில் கொண்டுவரப்பட்ட தமிழர் இனவழிப்பு அறிவூட்டல் வாரம் என்பவற்றை சிங்கள அரசுபோலவே அவை நல்லிணக்கத்தை பாதிக்கும் செயற்பாடு எனவும் தெரிவித்திருந்தார். 

கொலைகள் நடந்திருந்தாலும் அதன் நோக்கம் கொலைக்கான நோக்கம் என நிறுவவேண்டும் என சட்டாம்பித்தனம் பேசினார். வாகன விபத்தில் கூட கொலைகள் நடக்கலாம் ஆனால் அங்கு கொலைக்கான நோக்கம் இருக்கவேண்டுமல்லவா என மறுகேள்வி கேட்டார். 

ஒரு தமிழர் சார் சட்டத்தரணியாக தமிழர் தரப்புக்கான நீதிக்கான விடயங்களை தேடவேண்டியவர் அத்தகைய முயற்சிகளுக்கே ஆதாரம் இல்லை என அந்த முன்னகர்வுகளை தொடர்ந்து விமர்சித்தார்.

சுமந்திரனின் கருத்தை விமர்சித்த முன்னாள் சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன்

    

இனவழிப்புக்கு ஆதாரம் போதாது 4.06 ஆவது நிமிடத்தில்

   

ஆனால் இன்று கனேடிய நாடாளுமன்றத்தில் கூட தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையை இங்கு கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்-சுமந்திரன்

   

 சுமந்திரனின் நிலைப்பாடு குறித்து சிறிதரன் விளக்கம்

   

👷நான்காவது 

கடந்த 2015 இல் சிறிலங்கா சுதந்திர தின நிகழ்வில் தமிழர் தரப்பு பிரதிநிதிகளாக சம்பந்தனும் சுமந்திரனும் கலந்துகொண்டதன் மூலம் தமிழர்களுக்கு நீதியோ தீர்வோ சுதந்திரமான வாழ்வையோ அனுமதிக்காத சிறிலங்கா கட்டமைப்பை உளவிருப்புடன் ஏற்றுக்கொண்டதாக வரலாற்றில் பதியப்பட்டது மட்டுமன்றி சிறிலங்கா சுதந்திரநாளை கரிநாளாக நினைவு கூர்ந்த மக்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதோடு அந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவித்திருந்தார். 

  இலங்கை சுதந்திரநாளில் குடும்ப சமேதராக கலந்துகொண்ட போது


அந்தக்கவனயீர்ப்பு போராட்டத்தில் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டதை கூட "அவர் கலந்துகொள்ளவில்லை அந்த வீதியால் போனபோது ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தது அதனை எட்டிப்பார்க்கவே அவர் சென்றதாக இவர் சொல்லி" அதன் மூலம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆதரவாளர்கள் அத்தகைய கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வதை கூட தடுக்கும் வகையில் செயற்பட்டார்.


  சுதந்திரநாளை கரிநாளாக கொண்டு போராடியவர்களை கொச்சைப்படுத்தியபோது  

👷ஐந்தாவது

தமிழர் வலி சுமந்த நாளான முள்ளிவாய்க்கால் நினைவுநாளுக்கோ அல்லது தியாகத்தின் உச்சத்தை தொட்ட மாவீரர் நாளிலோ ஒரு தடவையேனும் கலந்துகொள்வதை கடந்த 13 ஆண்டுகளாக தவிர்த்து வந்த சுமந்திரன் சிறிலங்கா பாராளுமன்றில் இறந்த இராணுவத்தினருக்காக பொப்பி மலரினை அணிந்தது மட்டுமல்லாது அண்மையில் 2022 மே மாதத்தில் மறைந்த சிறிலங்கா இராணுவத்தினருக்கும் சேர்த்து தான் கவலையடைவதாக அறிக்கைவிட்டிருந்தார். 


ஆனால் இனத்தையே அழிப்பு செய்த படைக்கட்டமைப்பிற்கு எதிராக நீதி கேட்கின்ற ஒரு இனத்தின் பிரதிநிதி இங்கே இதன் மூலம் என்ன சொல்ல வருகின்றார் என்பதை கவனத்திற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  சுமந்திரனின் திட்டங்கள் தொடர்பில் சிறிதரன் விளக்கம்


👷ஆறாவது 

தமிழர் அரசியல் உரிமைகள் தொடர்பில் பொங்குதமிழுக்கு பின்னர் தமிழ்க் கட்சிகள் ஒன்று திரண்டு எழுகதமிழ் பேரணி நிகழ்வை நடாத்த முற்பட்டபோது அதனை விமர்சித்த சுமந்திரன் அதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உடன்பாடில்லை எனவும் அது நல்லிணக்கத்தை பாதிக்கும் எனவும் நீங்கள் எழுங்கோ எழாமலிருங்கோ ஆனால் சிங்களவர்கள் எழுந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கொச்சைப்படுத்தியிருந்தார். 

 பேசிய பகுதி 3.40ஆவது நிமிடத்தில்

   

அதனைப்போல ஒற்றையாட்சிக்கு எதிரான கடந்த இரண்டு பேரணிகளையும் கொச்சைப்படுத்திய அவர் சிங்கள இனவாதம் இதனைப்பார்த்து பொங்கபோகின்றது எனவும் கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் அதே காலப்பகுதியில் தான் சிங்கள மக்களே பொங்கியெழுந்து மகிந்த அரசையே வீட்டுக்கு அனுப்பினார்கள் என்பதையும் இங்கு நினைவூட்டுகின்றோம். 

👷ஏழாவது 

பொது அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி நடைபேரணி நிகழ்வை மடைமாற்றி தமது சுயலாப நோக்கில் போராட்ட முடிவிடத்தில் போராட்டக்காரர்கள் பிரகடனம் வாசித்தவேளை சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் வேறிடத்திற்கு சென்று வேறொரு நினைவுக்கல்லை நாட்டி அரசியல் சுயலாபம் தேடியது மாத்திரமல்லாது அந்த போராட்ட பிரகடனத்தை சர்வதேசத்திடம் முன்வைக்காது சிறிலங்கா பாராளுமன்றில் முன்வைத்து இந்த அரசிடமே நீதிவேண்டி மக்கள் போராடியதாக அந்த போராட்டத்தையே திசைமாற்றியிருந்தார். 

  பேராட்ட பிரகடனம் இங்கே வாசிக்கப்பட்டபோது சுமந்திரன்,சாணக்கியன் வேறிடத்தில்

 

அந்த பிரகடனத்தில் உள்ளவற்றையே சிறிலங்கா நாடாளுமன்றத்தில் திசைதிருப்பி தமிழர்கள் ஏதோ கோத்தாவிடம் தான் கோரிக்கை வைக்கின்றார்கள் என்பது போல நாளாந்த பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும் எனவும் மடைமாற்றினார். 

👷எட்டாவது

சிறிலங்காவிற்கு எதிராக போர்க்குற்றம் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை பேரம்பேசும் வலுவாக மாற்றாமல் அந்த சிக்கலிலிருந்து சிறிலங்காவை காப்பாற்றுவதற்காக மூன்று தடவைகள் ஜெனிவா சென்று இலங்கை அரசிற்கு காலஅவகாசம் வழங்கும் வேலைகளை செய்து தனக்கு வேண்டிய ரணில் அரசை ஆட்சிக்கு கொண்டுவரும் வேலைகளிலும் ஈடுபட்டு வந்தார். 

பாதிக்கப்பட்ட பெண்ணாக ஜெனிவாவில் முன்னாள் வடமாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் இராணுவத்தினர்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோது அவ்வாறு இராணுவத்தினர்மீது மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கமுடியாது விடுதலைப்புலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் எனச்சொன்னார்.

                       இது தொடர்பில் அனந்தி சசிதரன் கொடுத்த விளக்கம்


இதன் அடிப்படையிலேயே ஏனைய கட்சிகளுக்கு தெரியாது 2015இல் இலண்டன் மற்றும் சிங்கப்பூரில் இரகசிய சந்திப்புக்களையும் செய்திருந்தார். இதன் மூலம் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதே நோக்கம் அன்றி தமிழர் தரப்பு அரசியல் கோரிக்கைகளுக்கான எந்ததீர்வு நோக்கிய நகர்வாகவும் அது அமையவில்லை.




👷ஒன்பதாவது 

தமிழர்கள்மீது இனவழிப்பு நடைபெற்றதற்கான போதிய சாட்சிகள் இல்லை சொன்ன அதே சுமந்திரன் தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதன்பின் ஒருபடிமேலே போய் விடுதலைப்புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்றும் அதனை இப்போதும் சொல்கிறேன் எப்போதும் சொன்வேன் என்று பேசி தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அறத்தை தமிழர் பிரதிநிதியாக கொச்சைப்படுத்தியும் இருந்தார்.மன்னாரில் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டபோதுகூட அதனை கிழறவேண்டாம் கிழறினால் அது தமிழருக்கே பாதிப்பு என இராணுவத்தின் படுகொலைகளை மூடிமறைப்பதற்கு முயற்சித்தார்.  

 சுமந்திரனின் சட்டவல்லமையை விமர்சித்த முன்னாள் சட்டத்துறை விரிவுரையாளர்

   

இனவழிப்புக்கு ஆதாரம் போதாது 4.06 ஆவது நிமிடத்தில்

    

புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள்-சுமந்திரன்
   

 👷பத்தாவது 

புதிய யாப்பு என்ற பெயரில் தமிழர்களது அரசியலை குழி தோண்டி புதைக்கும் வகையில் தமிழர் தரப்பு பிரதிநிதியாக பௌத்தமதத்தை முதன்மை மதமாக ஏற்றுக்கொள்வதாகவும் சமஸ்டி சாத்தியமில்லை என்பதையும் பிரிபடாத, பிரிக்கமுடியாத, ஒரேநாட்டுக்குள், ஒருமித்த நாட்டுக்குள் என அடுக்கடுக்கான நிபந்தனைகளை அரசைவிட ஒருபடிமேலே சென்று தீர்வு வரைபுகளில் சேர்த்து தமிழினம் ஒருபோதும் சுயநிர்ணய உரிமையை கோரமுடியாதவாறு அரச முகவராகவே மாறி வரைபுகளில் மாற்றங்களை செய்திருந்தார். 

அந்த தீர்வு யோசனையானது தற்போதிருக்கின்ற ஒற்றையாட்சி கட்டமைப்பை இன்னும் பலப்படுத்தவதோடு மட்டுமன்றி அதற்கு வரலாற்றில் முதற்தடவையாக தமிழர்களும் ஆதரவு வழங்குகின்றார்கள் என்ற நிலையை ஏற்படுத்த முயற்சித்துவருகின்றார்.

இடைக்கால அறிக்கை சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்துகிறார் யாழ் பல்கலைக்களக சட்டத்துறை விரிவுரையாளர் திர.குருபரன் 16.20 ஆவது திமிடத்தில் கவனியுங்கள்

   

👷பதினோராவது 

தமிழர்களது போராட்டத்தை சிறுமைப்படுத்தும் வகையில், முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் தம்மை இலக்கு வைக்கிறார்கள் என்ற சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் சதி நடவடிக்கைக்கு துணை நின்று 20 பேருக்கு மேலானவர்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்படுவதற்கு காரணமானவர் இருந்து வருகின்றார். 

இதனையே சாட்டாக வைத்து சர்வதேச நாடுகள் சில விடுதலைப் புலிகள் மீதான தொடர் தடையை நியாயப்படுத்தவும் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்தோரை அந்தந்த நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனச்சொல்லி தடுப்பில் வைத்திருக்கவும் காரணமாக இருந்து வருகின்றார். 

 சுமந்திரனால் சிறையில் இருக்கும் நபர்கள் யாரென பாருங்கள்

   

👷பன்னிரண்டாவது 

சிங்கள தேசிய கட்சிகளுக்கு இடையிலான போட்டியில் நிபந்தனைகள் இன்றி ஒரு தரப்புக்கு ஆதரவளித்து அந்த கட்சியின் முகவராக செயற்பட்டதன் மூலம் தமிழர் பிரச்சனையின் நியாயத்தை வெளிக்கொண்டுவருவதில் தடைக்கல்லாக இருந்து வருகிறார். தமிழர் தரப்பாக நிலைப்பாடு எடுக்கப்படவேண்டிய களத்தில் சிங்களத்தின் கட்சிகளுக்கான சார்பு நிலைப்பாட்டை தானே முன்வைத்து அதனை கட்சியின் நிலைப்பாடாக மாற்றுவதில் தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்றார். 

இதில் சர்வதேச அரசுகளின் கைப்பொம்மையாக அவரது செயல் பலப்படுத்தப்படுவதால் அவரது கட்சிக்குள்ளும் அதற்கு எதிரான விமர்சனங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. 

சர்வதேச அரசுகள் என்பவை தமது நலன்சார்ந்த போட்டியில் தமக்கு இலகுவான காய்நகர்த்தல்களையே செய்யும். அதில் ஒரு தரப்பான தமிழர் தரப்பு எந்தக்கேள்வியும் இன்றி சர்வதேச அரசுகளின் அணுகுமுறையை ஏற்றால் தமிழர் நலன்சார் தீர்வு இன்றியே இலகுவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த ஆபத்தான அரசியல் செல்நெறியை புரிந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். 

👷பதின்மூன்றாவது 

தமிழர் தீர்வை சிறிலங்கா அரசும், இந்திய ஏகாதிபத்திய அரசும் 13ம் திருத்தத்திற்குள் முடக்கும் வேலையினை ரெலோ தலைமையில் செய்தபோது மக்கள் சமஸ்டிக்கே வாக்களித்ததாக யாழில் வீராப்பு பேசிவிட்டு இரண்டுநாளில் கொழும்புசென்று 13ம் திருத்தம் தொடர்பான கலந்துரையாடலில் பங்குகொண்டு இந்தியாவிற்கு கடிதம் அனுப்பிவிட்டு அடுத்தவாரம் கனடாவிற்குச் சென்று சமஸ்டி பேசப்போவதாக மக்களை ஏமாற்ற முற்பட்டு கனடாவிலிருந்து மக்களால் துரத்தி அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையை இங்கு நினைவூட்டுகின்றோம். 

 யாழில் 12.11.2021 இல் பேசியபோது
   
 
 யாழில் 13 திருத்தத்திலுள்ள குறைபாடுகள் தொடர்பில் பேசியபோது

 

இந்தியாவுக்கு 13ஆம் திருத்த அடிப்படையில் தீர்வு என கடிதம் எழுதிய மை காய்வதற்கு முன்னரே சர்வசன வாக்கெடுப்புத்தான் தீர்வு என இன்னொரு கடிதத்தை அதே ரெலோ-விக்கி கூட்டு அனுப்பிய சுத்துமாத்தை போல தொடர் சுத்துமாத்தை சுமந்திரன் செய்துவருவதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  சுமந்திரன் சம்பந்தனின் சுத்துமாத்து தொடர்பில் சிறிதரன்

 

👷பதின்நான்காவது

தற்போதைய கோட்டா அரசின் வங்குரோத்து நிலையினை சீர்செய்வதற்காக முதன் முதலில் அனைத்து கட்சிகளையும் தனிநபராக அழைத்து சர்வதேச நாடுகளிடம் நிதியை பெறுவதனூடாக கோட்டா மகிந்த அரசுகளை காப்பாற்றும் வேலைகளை சுமந்திரனே செய்திருந்தார் என்பது பலர் அறியாத விடயம். 



ஆனால் கோத்தாகோகம ஆரம்பிப்பதற்கு முன்னர் சர்வகட்சி கூட்டத்தை கூட்டி இரகசியமாக கோத்தா-மகிந்த அரசை காப்பாற்றுவதற்கு பகலிரவாக பல சந்திப்புகள் நடைபெற்றிருந்தன. 

இதில் தனியாக கோத்தா வீட்டிலும் மகிந்த வீட்டிலும் இந்த இரகசிய சந்திப்புகளும் ஆலோசனைகளையும் தனிநபராக சுமந்திரன் வழங்கிவந்தார். 

👷பதினைந்தாவது

சிறிலங்கா அரசு சார்பாக செயற்படும் அவரது நடவடிக்கைகளை மறைப்பதற்காக தனிநபர் நடவடிக்கைகளை ஆரம்பித்து பயங்கரவாத சட்டம் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்ற நாடகத்தை சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் செய்திருந்தபோதும் அதே பயங்கரவாத தடைச்சட்டம் வாக்கெடுப்புக்கு வந்தபோது அதற்கு எதிராக சம்பந்தனோ,சாணக்கியனோ வாக்களிக்காது போனது மட்டுமல்ல அதே காலப்பகுதியில் இலங்கை அரசை பிணையெடுப்பதற்கு சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினர்களோடு சாணக்கியனை அனுப்பி அரசை பாதுகாக்கும் வேலைகளை செய்திருந்தார். 



சம்பந்தன் விக்கி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை

👷பதினாறாவது

தென்னிலங்கை மக்கள் கோட்டா அரசை வீட்டுக்கு அனுப்பவேண்டுமென போராடியவேளை பதவிக்காக ரணில் இடையே புகுந்து பிரதமர் பதவியை எடுத்து போராட்டத்தை திசைதிருப்பியபோது மக்களோடு சேர்ந்து ரணிலை விமர்சிப்பதாக சொன்ன சுமந்திரன் அடுத்தநாளே ரணில் அமைக்கவுள்ள சட்டவாக்க குழுவிற்கு தலைமை ஏற்பதாக சொல்லியதன் ஊடாக தனது இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியிருந்தார். 

ரணில் பதவியேற்றமையை பாராளுமன்றில் கடுமையாக விமர்சிக்கும் சுமந்திரன் 
              
மறுநாள்


இப்போது சுமந்திரனும் சாணக்கியனும் நாளாந்தம் ரணிலோடு மோதுவது போல பேச்சுக்கள் பத்திரிகைகளில் வருகின்றது அல்லது அவை வரவைக்கப்படுகின்றது. அவற்றின் உண்மைதன்மை அறியவேண்டுமானால் சுமந்திரனது சுத்துமாத்துகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். 

இவ்வாறு மகிந்தவின் வீட்டில் காலைச்சாப்பாட்டையும் ரணில் வீட்டில் இரவுச் சாப்பாட்டையும் ரணிலுடனும் மைத்திரியுடனும் அவர்களது விமானத்தில் பறந்து வடக்கு கிழக்கு சென்றுவந்ததை தவிர தமிழர் நலனுக்காக சாதித்தது என்ன? கோத்தாவையும், மகிந்தவையும், ரணிலையும், இராணுவத்தளபதியைக்கூட தனது கைத்தொலைபேசியில் வைத்திருந்த சுமந்திரன் தமிழருக்காக சாதித்தது என்ன? 

அரசுகொடுத்த பங்களா மற்றும் சலுகைகள் தொடர்பில் சுரேஸ்

   

எம் அன்புக்குரிய தமிழீழ மக்களே சுமந்திரன் போன்ற அரசின் முகவர்கள் தொடர்பில் மிகவும் அவதானத்தோடு இருப்போம். 

இது தனியே சுமந்திரன் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. துரதிஸ்டவசமாக சுமந்திரனின் எத்தகைய நகர்வுக்கும் இணங்கிப்போகும் விதத்தில் தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இருக்கின்றது. ஏனென்றால் ஜனாதிபதி சட்டத்தரணி என்ற கோதாவில் அனைத்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட வழக்குகள் மற்றும் நலன்கள் என்பன சுமந்திரனின் கோப்புகளில் இருக்கின்றது.  

அதனை இலகுவாக புரிந்துகொள்ளவேண்டும் என்றால், மண்ணின் மைந்தன் என்றும் மாவீரர்கள் என்றும் மக்களை உசாரேற்றும் பேச்சுகளை நாடாளுமன்றத்தில் பேசி பிரபலமடைந்த சிவஞானம் சிறிதரன் தான் கடந்த தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரனை "வெல்லவைத்தவர்" என்பதை அறிந்துகொள்ளுங்கள். 

எனவே தான், சுமந்திரன் என்ற தனிநபர் ஊடாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செல்நெறியை உங்கள்முன் வைக்கின்றோம். இதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வதும் அதனை தொடர்ந்தும் நினைவில் வைப்பதும் உங்கள் அனைவரின் பொறுப்பாகும். அதனை தவறவிடுவீர்களானால் உங்கள் தலைவிதியை நொந்துகொள்வதை தவிர வேறு வழியில்லை. 

நன்றி

தொடர்புடைய முன்னைய செய்திகள்





விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை




75 கள்ள வாக்குகள் போட்டேன் -சிறிதரன் அதிரடி(காணொளி)




விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை









ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்







மீனவர்களின் போராட்டத்தில் ஏற்படுத்திய சட்டமூல நாடகம் விவசாயிகள் பிரச்சனைக்கு நெல்லு விதைப்பு நாடகம்  
சுதமந்திரனின் சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர் குணா கவியழகன்

 

 கட்சிக்கு வந்த 21கோடி நிதி எங்கே தமிழரசு மகளிரணி போர்க்கொடி

 

 மூன்று இலட்சம் ரூபாவில் 3000 பேரரை கூட்டத்திற்கு எப்படி அழைக்கும்