போராட்டம் வெற்றி - போனஸ் முழுயைாக வழங்கப்படும்! - THAMILKINGDOM போராட்டம் வெற்றி - போனஸ் முழுயைாக வழங்கப்படும்! - THAMILKINGDOM
 • Latest News

  போராட்டம் வெற்றி - போனஸ் முழுயைாக வழங்கப்படும்!

  தமது போராட்டம் வெற்றியளித்துள்ளதாகவும், மேலதிகக் கொடுப்பனவை முழுமையாக வழங்க அதிகாரிகள் இணங்கியுள்ளதாகவும், நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

  அந்த கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்கவின் கையெழுத்துடன் வௌியாகியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

  மேலதிக கொடுப்பனவை முழுமையாக வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 26ம் திகதி முதல் நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை ஊழியர்களால் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

  இதனை அடுத்து, இன்று மேலதிகக் கொடுப்பனவுகளை (37,000 ரூபாய்) முழுமையாக வழங்குவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளதாவும், எனவே தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை நிறுத்தவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: போராட்டம் வெற்றி - போனஸ் முழுயைாக வழங்கப்படும்! Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top