Breaking News

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை ஜனாதிபதி, பிரதமர் மாறுபட்ட கருத்து

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய கருத்துக்கள் மாறுபட்டதாக காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதேவேளை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின்போது தேசிய பொறிமுறை தொடர்பில் மாத்திரமே தெரிவித்ததாகவும், ஆனால் பிரதமர் வௌிநாட்டு உதவிகளை இந்த விசாரணைகளுக்காக பெற்றுக்கொள்வது தொடர்பில் கருத்து வௌியிட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இந்த விடயத்தில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி மாறபட்ட கருத்துக்களை கொண்டுள்ளமை தெளிவாக தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்த யோசனையிலுள்ள விடயங்கள் தொடர்பில் சரியான புரிதல் இல்லாதிருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.