Breaking News

ராஜபக்ஷ குடும்பத்தை சிறையில் அடைத்து பழிதீர்க்க முயற்சி- என்கிறார் மஹிந்த

றக்பி வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் நாமல் ராஜபக் ஷவை கைது செய்­வார்கள். அதன் பின்னர் கோத்­த­பய ராஜபக்ஷவை கைது­செய்­வார்கள்.

பின்னர் பசில் ராஜ­ப­க் ஷவை கைது­செய்வார்கள். இறு­தி­யாக என்­னையும் கைதுசெய்து பழி­தீர்த்­துக்­கொள்­வார்கள் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கண்டி தல­தா­மா­ளி­கை யில் வழி­பாட்டு நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்தார். வழி­பா­டு­களை முடித்­துக்­கொண்டு வெளியே வந்­த­போது றக்பி வீரர் தாஜு தீன் மரணம் தொடர்பில் எழுந்­துள்ள சந்­தே­கங்கள் தொடர்பில் ஊட­கங்கள் கேள்வி எழுப்பி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

றகர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் எனது குடும்பம் கைது­செய்­யப்­படும் எனவும் அதற்­கான நட­வ­டிக்­கைகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­ற­தா­கவும் பத்­தி­ரி­கைகள் தெரி­வி­கின்­றன. அதேபோல் கடந்த ஆட்­சியில் உயர்­மட்ட அதி­கா­ரி­க­ளுடன் அரச அதி­கா­ரிகள் தொடர்­பு­களை வைத்­தி­ருந்­தனர் என்ற குற்­ற­சாட்டின் அடிப்­ப­டையில் அவர்­களை பதவி நீக்கும் நட­வ­டிக்­கையும் கைது­செய்யும் நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அத்­துடன் இப்­போது ரகர் வீரர் தாஜுதீன் மர­ணத்தில் எனது மகன் நாமல் ராஜபக் ஷ தொடர்­பு­பட்­டுள்­ள­தாக செய்­திகள் வெளி­யாகி வரு­கின்­றன. அந்த சம்­ப­வத்தில் சந்­தே­கத்தின் பேரில் நாமல் ராஜபக் ஷவை கைது­செய்யப் போவ­தா­கவும் எனது மனைவி ஷிரந்தி ராஜபக் ஷவை கைது­செய்­யப்­போ­வ­தா­கவும் கூறு­கின்­றனர்.

ஆனால் இந்த குற்­றச்­சாட்­டுகள் அனைத்­துமே பொய்­யா­னவை. நாம் இந்த நாட்டில் உண்­மை­யா­கவும் நேர்­மை­யா­கவும் ஆட்சி நடத்தி சென்­றுள்ளோம். எனினும் இவர்கள் எம்­மீது உள்ள தனிப்­பட்ட கோபத்தை தீர்த்­துக்­கொள்ளும் நோக்­கத்தில் இவ்­வா­றான பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி பழி­தீர்க்­க­பார்க்­கின்­றனர்.

ஆகவே இப்­போது ரகர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் நாமல் ராஜபக் ஷவை கைது செய்­வார்கள். அதன் பின்னர் கோத்­தா­பய ராஜபக் ஷவை கைது­செய்­வார்கள். பின்னர் பசில் ராஜபக் ஷவை கைது­செய்­வார்கள். இறு­தியில் என்னை கைது­செய்து தமது நோக்­கத்தை நிறை­வேற்­றிக்­கொள்­வார்கள் என்றார்.

இதே­வேளை நேற்று முன்­தினம் கண்­டியில் நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்­டி­ருந்த முன்னாள் ஜன­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உரை­யாற்­று­கையில்

விடு­தலைப் புலி­களை விடு­தலை செய்­வதும் எமது இரா­ணு­வத்தை தண்­டிக்க வேண்டும் என்­ப­துமே இன்­றைய அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாக உள்­ளது. அர­சாங்­கத்தின் தேவையும் அது­வா­கவே உள்­ளது. ஆகவே சர்­வ­தேச நாடு­க­ளையும் புலம்­பெயர் அமைப்­பு­க­ளையும் திருப்­திப்­ப­டுத்த வேண்­டு­மாயின் அவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டிய நிலைமை அர­சாங்­கத்­திற்கு உள்­ளது. மிக சிர­மத்தின் மத்­தியில் இன்று நல்­லாட்சி என்ற மாற்­றமும் அதற்­கா­கவே ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே இந்த விட­யத்தில் ஆச்­ச­ரி­ய­ம­டைய தேவை­யில்லை.

ஆரம்­பத்தில் மீள்­கு­டி­யேற்றம் மட்டும் வேண்டும் என்­ற­வர்கள் இப்­போது வடக்கில் உள்ள இரா­ணு­வத்தை முழு­மை­யாக வெளி­யேற்ற வென்றும் கூறு­கி­றனர். தனி வடக்கு கிழக்கு அல­கு­களை பலப்­ப­டுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்­துள்­ளனர். நாம் யுத்­தத்தின் பின்னர் எவ்­வாறு வடக்கை கையாண்­டோமோ அந்த நிலை­மையில் இன்று நாடு இல்லை.

இந்த செயற்­பாட்­டினால் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் பல­ம­டையும், அவர்­க­ளுக்­கான மாகாண அதி­கா­ரங்கள் பலப்­ப­டு­தப்­பட்டால் அவர்­க­ளுக்­கான பொலிஸ், காணி அதி­கா­ரங்கள் பகி­ரப்­படும். இதையே சர்­வ­தேச தரப்­பி­னரும் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். சர்­வ­தேச பிர­தி­நி­தி­களின் இலங்கை விஜ­யத்தின் போதும் இந்த விடயம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரப்­பட்­டுள்­ளது.

ஆகவே அதை நிறை­வேற்­றி­யா­க­வேண்­டிய கட்­டா­யத்தில் அர­சாங்கம் உள்­ளது. அவ்­வாறு ஒரு நிலைமை ஏற்படுமாயின் மீண்டும் நாட்டில் ஆயுத மோதல் நிலைமை ஒன்று உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல் மீண்டும் நாட்டில் குழப்பகர சூழல் உருவாகி சர்வதேசத்தின் அத்துமீறிய செயற்பாடுகளினால் நாடு துண்டாடப்படும். அந்த இலக்கை நோக்கியே இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் பயணித்துக்கொண்டிருக்கின்றனர் என்றார்.