புலிகளின் தாக்குதலால் சந்திரிக்கா நினைவிழந்துள்ளார் - கம்மன்பில
நகர மண்டப குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது சுய நினைவை இழந்துள்ளதாக ப்வித்துரு ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டு எதிர்கட்சி மற்றும் முன்னைய அரசாங்கம் தொடர்பில் சந்திரிக்கா தெரிவிக்கும் கருத்துக்கள் முட்டாள்தனமானது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.இரண்டு முறை சிந்திக்காமல் நினைவில் என்ன வருகிறதோ அதனையே சந்திரிக்கா தெரிவிப்பதாகவும் இது குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டதில் ஏற்பட்ட விளைவு எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக களணியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான கொள்கை மற்றும் கோட்பாடு திருடுதல் என விமர்சித்திருந்தார்.தற்போதைய நிர்வாகத்திலுள்ள ஊழல் செய்த தனிநபர்கள் பதவியில் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.








