மஹிந்த, சரத் என். சில்வா ஆகியோருக்கு எதிராக மனு - THAMILKINGDOM மஹிந்த, சரத் என். சில்வா ஆகியோருக்கு எதிராக மனு - THAMILKINGDOM
 • Latest News

  மஹிந்த, சரத் என். சில்வா ஆகியோருக்கு எதிராக மனு

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா ஆகியோர் உட்பட பலருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் நடவடிக்கைகள் தொடர்பாக தான் ஊழல் ஆணைக்குழுவில் முன்வைத்துள்ள முறைப்பாடுகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதைத் துரிதப்படுத்துமாறு ரீட் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு வேண்டி சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

  நுகேகொட சுகந்தாராம வீதியில் வசிக்கும் சட்டத்தரணி நாகந்த கொடிதுவக்குவினால் முன்வைக்கப்பட்டுள்ள இம்மனுவின் பிரதிவாதிகளாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழு, நீதியரசர் கே. ஸ்ரீ பவன், முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, மொஹான் பீரிஸ், சரத் என். சில்வா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சட்டத்தரணிகள் சங்க தலைவர் ஜேப் அலகரத்னம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மஹிந்த, சரத் என். சில்வா ஆகியோருக்கு எதிராக மனு Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top