Breaking News

முக்கிய பொறுப்புக் கேட்கவில்லை - கோத்தா மறுப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தனக்கு பொறுப்பு வாய்ந்த பதவி அளிக்கப்பட வேண்டும் என்று கோரியிருப்பதாக வெளியான செய்திகளை  முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மறுத்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பொறுப்பு வாய்ந்த பதவி ஒன்றை வழங்க வேண்டும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச, தாம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அல்ல என்றும், இத்தகைய செய்திகள் வெறும் வதந்தியே என்றும் தெரிவித்துள்ளார்.

தாம் சுதந்திரக் கட்சியிலோ நாடாளுமன்றத்திலோ இருக்கவில்லை என்றும், இராணுவ அதிகாரியாகவே இருந்தேன் என்றும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.