Breaking News

சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது சாத்தியமற்றது!

எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் எந்­த­வித முன்­ன­றி­வித்­தலும் இல்லை.

சம்­பந்­த­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யினை கொண்­டு­வந்­தாலும் ஆத­ரிப்­பது தொடர்பில் கட்­சிக்குள் எந்­த­வித தீர்­மா­னமும் இது­வ­ரையில் எடுக்­க­வில்லை என ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி ஆகிய பிர­தான கட்­சிகள் தெரி­வித்­தன.

பாரா­ளு­மன்­றத்தில் தனிக் கட்­சி­யாக அங்­கீ­காரம் பெறாத நபர்­களின் கருத்­து­களை கவ­னத்தில் கொள்­ள­வில்லை எனவும் கட்­சிகள் தெரி­வித்­தன.

எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லா பிரே­ரணை கொண்­டு­வர தீர்­மா­னித்­துள்­ள­தாக பொது எதி­ர­ணி­யினர் தெரி­வித்­துள்ள நிலையில் பிரே­ர­ணையை ஏனைய கட்­சிகள் ஆத­ரிக்­குமா என ஊடகம் ஒன்று வின­வி­ய­போதே பிர­தான கட்­சிகள் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டன.

இது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பிக்க ரண­வக்க குறிப்­பி­டு­கையில்,தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அண்­மைக்­கால செயற்­பா­டுகள் விமர்­சிக்கக் கூடிய வகையில் அமைந்­துள்­ளமை உண்­மை­யே­யாகும்.

வடக்கில் இரா­ணுவ முகா­முக்குள் அத்­து­மீறி சம்­பந்தன் சென்றார் என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் வட­மா­காண சபையும் அண்மைக் கால­மாக மோச­மான வகையில் செயற்­பட்டு வரு­கின்­றது. இவற்றை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம்.

எனினும் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் எந்த கார­ணங்­களும் எமக்குத் தெரி­யாது.பொது எதி­ர­ணி­யினர் கொண்­டு­வ­ரு­வ­தாக அறி­வித்தல் விடுக்­க­வில்லை.
ஒரு­சில ஊட­கங்­களில் அவ்­வா­றான கருத்­துகள் வெளி­வந்­துள்ள போதும் அதன் உண்­மைத்­தன்மை தொடர்பில் எமக்கு எதுவும் தெரி­யாது. அவ்­வாறு இருக்­கையில் எம்மால் எந்த தீர்­மா­னத்­தையும் தெரி­விக்க முடி­யாது.

எதிர்க்­கட்சி தலை­வ­ருக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லாத் தீர்­மானம் கொண்­டு­வ­ரப்­ப­டு­மாயின் அது தொடர்பில் கட்சி கலந்­தா­லோ­சித்து தீர்­மானம் எடுக்கும் என்றார்.மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா தெரி­விக்­கையில்,கடந்த காலத்தில் அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது.

மஹிந்த ஆத­ரவு அணி­யினர் தான் அந்த பிரே­ர­ணை­க­ளையும் கொண்­டு­வந்­தனர். ஆனால் இறு­தியில் அவை வெறும் விளம்­ப­ர­மாக மட்­டுமே காணப்­பட்­டன. அதேபோல் இப்­போதும் எதிர்க்­கட்சி தலை­வ­ருக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­தென தெரி­விக்­கின்­றனர்.

இதுவும் எந்­த­ள­வுக்கு சாத்­தியம் என்­பது சந்­தே­க­மே­யாகும். எவ்­வாறு இருப்­பினும் எதிர்க்­கட்சி தலை­வ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்தால் அதை ஆத­ரிப்­பது தொடர்பில் கட்சி எந்­த­வித தீர்­மா­னத்­தையும் இது­வ­ரையில் எடுக்­க­வில்லை.

அவ்­வாறு எந்த தீர்­மா­னங்­களும் எடுப்­ப­தாயின் கட்­சியின் அர­சியல் குழு தீர்­மானம் எடுக்கும். எவ்­வாறு இருப்­பினும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் செயற்­பா­டுகள் மோச­மா­ன­தாக அமைந்­துள்­ளன எனக் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் துமிந்த திசா­நா­யக தெரி­விக்­கையில்,எதிர்க்­கட்சி தலை­வ­ருக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லா பிரே­ரணை கொண்­டு­வர ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தீர்­மானம் எடுக்­க­வில்லை. கட்­சியில் அவ்­வாறு எந்தத் தீர்­மா­னமும் மேற்­கொள்­வ­தாக தெரி­விக்­கவும் இல்லை.

பாரா­ளு­மன்­றத்தில் கட்­சி­யாக அங்­கீ­காரம் பெறா­த­வர்கள் அவ்­வாறு நம்­பிக்கை இல்­லாப்­பி­ரே­ரணை கொண்­டு­வந்­தாலும் அதை ஆதரிக்க முடியாது.வடமாகாண சபையின் செயற்பாடுகள் அவர்களின் தனிப்பட்ட ஒரு நிலைப்பாடு. இதுவரையில் எதிர்க்கட்சி தலைவர் நாட்டை பிரித்து தனி இராச்சியம் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கவில்லை.

தவறான கருத்துகளை முன்வைத்து இனவாதத்தை பரப்பும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு இருக்கையில் நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வருவது சாத்தியமற்றது என்றார்.