Breaking News

எம்.பி.க்களின் எண்­ணிக்­கையை 245 ஆக அதி­க­ரிக்க பரிந்­து­ரை



பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை 240 அல்­லது 245 ஆக அதி­க­ரிக்கும் நோக்கில் தேர்தல் முறை மாற்றம் குறித்த யோசனை மாதிரி திட்­டங்கள் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற நிலையில் அதற்­காக பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பாட்டில் தேர்தல் முறை மாற்றம் முக்­கிய இடத்தை பிடித்­துள்­ளது.

அந்­த­வ­கை­யி­லேயே அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபைக்கு தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நான்கு யோசனை திட்­டங்கள் முன்­வைக்க­­ப்பட்­டுள்­ளன. அந்த வகையில் தற்­போ­தைய எண்­ணிக்­கை­யான 225 எம்.பி.க்களில் மாற்றம் இல்­லாத வகையில் இரண்டு யோச­னை­களும், எம்.பி. க்களின் எண்­ணிக்­கையை 240 ஆக உயர்த்த வேண்­டு­மென்ற உயர்த்த வேண்­டு­மென்ற ஒரு யோச­னையும், 245 ஆக உயர்த்­தப்­பட வேண்­டு­மென்ற மற்­று­மொரு யோச­னையும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.