முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி கட்டுவோம் – விஜயகலா
கேள்வி:- நல்லாட்சி அரசில் மீண்டும் கைதுகள் தொடங்கியிருக்குது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 31பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் இந்த நல்லாட்சியில் நீங்கள் ஒர் அமைச்சர் என்ற ரீதியில் இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்:- எங்களுடைய ஜனாதிபதி வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்கின்றார் இதை பொறுக்க முடியாத தீயசக்திகள் தீவிரவாதிகள் எங்களுடைய நல்லாட்சி அரசை கொண்டு நடத்த விடக்கூடடாது என்பதற்காக ஒரு சிலரை கொண்டு வந்து அங்கிகள் , கிரணைட்டுக்கள் இருப்பதாக கூறி நல்லாட்சி அரசை குலைக்கும் அதாவது சுதந்திரமான எங்கள் அரசை குலைக்கும் சந்தர்ப்பமாகத்தான் இதை நடாத்தி வருகிறது.
ஆகையால் எங்கள் அரசாங்கம் இன்று அபிவிருத்தி செய்து வருகிறது அதனால் ஜனாதிபதி மாதம் ஒருதடவை வட – கிழக்கிற்கு விஜயம் செய்து மக்களுடைய அடிப்படைப்பிரச்சினைகள், எங்களுடைய கைதிகள் பிரச்சினைகள், எங்களுடைய முன்னாள் போராளிகள் இருக்கின்றார்கள் ஊனமுற்றவர்கள் மட்டும் வடகிழக்கில் மட்டும் 30ஆயிரம் பேர் இருக்கின்றார்கள், வடகிழக்கில் 90ஆயிரம் விதவைப் பெண்கள் இருக்கிறார்கள் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
அத்தோடு அபிவிருத்தி வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளை மாதாந்தம் அவர்கள் நேரடியாக வந்து பார்த்து அறிந்து சென்று போகின்றார்கள் இதற்காக சர்வதேசம் இதை அனுமதிக்கின்றது, சர்வதேசத்திற்கு கூட இது தெரிகின்றது. இதை கடந்த கால அரசாங்கம் தொடர்ந்து தங்களுடைய ஆட்சியை வைத்திருப்பதற்காக இருந்த வேளையில் எங்களுடைய அழுத்தம் காரணமாக எங்களுடைய மக்கள் திரண்டு அவர்களை வீட்டிற்கு அனுப்பி எங்களுடைய புதிய அரசாங்கத்தை நியமித்திருக்கின்றார்கள். ஆகையால் கடந்த சந்தர்ப்பத்தில் கடந்த மாதம் எங்களுக்கு ஓரு இக்கட்டான சூழ்நிலை ஒன்று ஏற்ப்பட்டது இன்று நாங்கள் ஒரு அரசியல் வாதியாக இருந்தும் நாங்கள் வெளியில் செல்லமுடியாத நிலையை கடந்த கால அரசாங்க தீயசக்திகள் உருவாக்கியிருந்தது. அதையும் மீறி ஜனாதிபதி வடக்கிற்கு சென்று வருகிறார்.
30வருடப்பிரச்சினை, போர்முடிந்து 7வருடங்கள்; கடந்த அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை . இதை எங்களுடைய அரசாங்கம் படிப்படியாக செய்கின்றமையால் பொறுக்க முடியாத தீயசக்திகள் தான் கைது செய்வதற்கான இப்படியான உத்திகளை கொண்டுவருகிறார்கள். எங்களுடைய நல்லாட்சியில் கைது செய்திருந்தாலும் அவர்களை விசாரணை செய்து அவர்களை விடுதலை செய்வோம். அதில் எந்தத்தப்பும் இல்லை. அதற்காக நாங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமுமில்லை இந்த நல்லாட்சியிலே.
கேள்வி:- சென்ற வருடம் சொன்னீர்கள் அடுத்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைத்துத்தான் நிகழ்வு கொண்டாடுவதாக…?
பதில்:- எங்களுடைய உறவுகள் அந்த இடத்தில் உயிர்களை இழந்திருக்கிறார்கள்., அதற்காக நாம் தீபம் ஏற்றியிருந்தோம், அந்த இடத்தில் கூறியிருந்தோம் தற்போது இதற்கான அதிகாரம் வடமாகாண சபையின் கையில் இருப்பதால் வடமாகாண சபையை வைத்து நாங்கள் அதை செய்வோம். அதில் எந்த சந்தேகத்திந்கும் இடமில்லை. ஆனால், இந்த வருடத்திற்குள் செய்வதென்பது எமக்கு கஸ்டம் உங்களுக்கு தெரியும் 22வருடமாக வடமாகாண சபை இங்கே இயங்கவில்லை, பின்னர் 2013 வடமாகாணசபையை ஆட்சிக்கு கொண்டு வந்தும் எங்களுக்கு அதற்கான அதிகாரமோ, நிதியோ வழங்கப்படவில்லை.
தற்போது எங்களுடைய நல்லாட்சியில் தான் வடமாகாண சபைக்கான அதிகாரமும், நிதியும் வழங்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய ஒருலட்சத்திற்கும் அதிகமான உறவுகள் முள்ளிவாய்க்காலில் படு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் ஞாபகார்த்த தூபியை கட்டுவதற்கு யாரும் எதிர்க்க முடியாது, எங்களுடைய சொந்த மண்ணில் நாங்கள் கட்டுவதை யாரும் எதிர்க்க முடியாது . எதிர் காலத்தில் இந்த 5வருடத்தில் கட்டி முடிப்போம்.
கேள்வி:- இந்தமுறை அந்த நிகழ்வில் கலந்து கொள்வீர்களா?
பதில்:- கலந்து கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு கடவுளால் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் நாங்கள் அந்த இடத்திற்கு மீண்டும் செல்வேன். அதில் எந்தவித தப்பும் இல்லை . மக்களால் தெரிவு செய்யப்பட்ட நான் அதை செய்வதால் என்னை அரசாங்கம் நிராகரித்தால் நான் அஞ்சப் போவதுமில்லை.
கேள்வி:- அரசாங்கம் இம்முறை தடை செய்ய முயற்சி செய்தால்?
பதில்:- தடை செய்யமுடியாது. எங்களுடைய உறவுகள்தான் அதில் உயிரிழந்திருக்கிறார்கள் அவர்களுக்காக நாம் அங்கே போய் தீப சுடர் ஏற்றுவதற்காக அரசாங்கம் தலையிடாது, தலையிட எத்தனிக்கவும் மாட்டாது. தீய சக்திகள் ஏதாவது செய்ய எத்தனிப்பார்கள் அதற்கு எங்கள் ஜனாதிபதியோ, பிரதாரோ எங்களுக்கு ஒத்துழைப்பார்கள்.
கேள்வி:- அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றது இது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்:- இதற்கு போதைவஸ்த்து, வறுமையே காரணம். அத்தோடு வேலைவாப்பின்மை, இன்று எமது இளைஞர் யுவதிகள் வீதிகளில் நிற்கின்றார்கள். கடந்த கால அரசாங்கம் இனம் கண்டு இளைஞர் – யுவதிகளை ஒதிக்கியிருக்கின்றார்கள். படிப்பிற்கேற்ப கடந்த கால அரசாங்கம் இவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருந்தால் இப்படியான குற்றச் செயல்கள் செய்ய வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் அதை கட்டுப்படுத்தி வருகின்றோம். அதற்கும் மேலாக உங்களுக்கு தெரியும் எங்களுடைய யாழ்மாவட்ட நீதிபதி குற்றச் செயல்களை கட்டுப்படுத்திக் கொண்டு வருகிறார், வீதிகளில் 5மணிக்கு பின் சுற்றித்திரிபவர்களை, சந்தியில் நிற்பவர்களை கைது செய்யும்படி கூறி அவர் இந்த குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி வருகின்றார். எதிர்காலத்தில் இப்படியான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்றார்








