Breaking News

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பில் இராணுவத்தை ஈடுபடுத்துவது சட்டவிரோதம்

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்துவது சட்ட விரோதம் என்பதனாலேயே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி,

“இராணுவத்தினரை முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே, மகிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்டது.

இந்த முடிவு கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதமே எடுக்கப்பட்டு விட்டது.

தற்போதைய, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு அணியில் இருந்தும், இராணுவத்தினர் ஏற்கனவே விலக்கப்பட்டு விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.