Breaking News

மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை சம்பந்தனிடம் கையளிப்பு



புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான மக்கள் கருத்தறியும் குழுவினர், குறித்த அறிக்கையை நேற்று (புதன்கிழமை) எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளித்துள்ளனர். இந் நிகழ்வு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

புதிய அரசியலமைப்பிற்கு மக்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்ட இக் குழுவினால், நாடளாவிய ரீதியில் மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் மக்கள் கருத்தறியும் குழுவினரின் பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகருக்கு ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.