மஹேலவும் அதபத்தவும் 5 வருடங்கள் பேசாம இருந்ததன் காரணம் அம்பலம்..!! - THAMILKINGDOM மஹேலவும் அதபத்தவும் 5 வருடங்கள் பேசாம இருந்ததன் காரணம் அம்பலம்..!! - THAMILKINGDOM
 • Latest News

  மஹேலவும் அதபத்தவும் 5 வருடங்கள் பேசாம இருந்ததன் காரணம் அம்பலம்..!!  2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியுடனான உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான மாவன் அதபத்து 11 வீரர்கள் கொண்ட குழுவில் உள்வாங்கப்பட்டமை குறித்து தாம் அதபத்துவுடன் 4 அல்லது 5 வருடங்கள் கதைக்காமல் இருந்ததாக மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

  குறித்த உலகக்கிண்ண போட்டியில் இலங்கை அணித் தலைவராக இருந்தவர் மஹேல ஜெயவர்தன ஆவார்.

  Cricinfo இணையத்தளத்துடனான நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவிக்கையில், தாம் தலைமைப் பொறுப்பினை ஏற்ற காலகட்டத்தில், அணியின் சிரேஷ்ட வீரர்களான சனத் ஜயசூரிய மற்றும் மாவன் ஆகியோரினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க மிகவும் சிரமமாகவே இருக்கும் என மேலும் தெரிவித்துள்ளார்.

  “மாவன் என்பவர் திறமையான வீரரொருவர். அவரால் இயன்றளவு அவர் ஆடுவார். ஆனால், நிதானமாக ஆடுவதில் அசமந்தையாக இருப்பார். உலகக்கிண்ண போட்டியின் போது அவரது பங்கு அணிக்கு போதுமாக இருக்கவில்லை, என்றாலும் நாம் திறமையாக விளையாடினோம். 

  போட்டிகளின் பிற்பாடு மாவன் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்க ஆரம்பித்தார். அவர் என்னுடன் 4 அல்லது 5 வருடங்களாக என்னுடன் சுமுகமாக கதைக்கவில்லை. அணியின் ஆலோசகராக மாவன் உள்வாங்கப்பட்ட பின்னரே எங்களுக்கு இடையிலான சுமுகமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கட்டது.” என மஹேல தெரிவிக்கின்றார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மஹேலவும் அதபத்தவும் 5 வருடங்கள் பேசாம இருந்ததன் காரணம் அம்பலம்..!! Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top