புலிகள் இனவழிப்பு செய்தனராம் கொழும்பில் விழா எடுக்கிறார் சம்பந்தன்(ஆதாரம்) - THAMILKINGDOM புலிகள் இனவழிப்பு செய்தனராம் கொழும்பில் விழா எடுக்கிறார் சம்பந்தன்(ஆதாரம்) - THAMILKINGDOM
 • Latest News

  புலிகள் இனவழிப்பு செய்தனராம் கொழும்பில் விழா எடுக்கிறார் சம்பந்தன்(ஆதாரம்)


  தமிழீழ விடுதலைப்புலிகள் இனச்சுத்திகரிப்பு
  செய்தனராம் கொழும்பில் கண்டன நிகழ்வில் தலைமை ஏற்கவுள்ளார் சம்பந்தன்.

  முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அடங்கலாக சிங்கள பேரினவாதத்தாலும் கிழக்கில் முஸ்லீம் ஆயுதக்குழுக்களாலும் நடாத்தப்பட்ட எந்த ஒரு படுகொலை நிகழ்வினையும் கண்டித்து அதனை நினைவுகூர திராணியற்ற த.தே.கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சம்பந்தன் அடுத்த வாரம் கொழும்பில் விடுதலைப்புலிகள்மீது தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கவுள்ளதாக தமிழ்கிங்டொத்தின் செய்திப்பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

  எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் முஸ்லீம்களால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இந்தநிகழ்வில் விசேட விருந்தினராக கலந்துகொள்ளவுள்ள த.தே.கூட்டமைப்பின் தலைவர் விடுதலைப்புலிகள்மீதான தனது கடும் கண்டனத்தை வெளியிடுவார் எனவும் முஸ்லீம் நண்பர்கள் பலர் தமது முகநூல் பதிவுகளில் வெளியிட்டுள்ளதோடு இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

  வடக்கிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் அதன் பின்னணி மற்றும் அந்த முடிவால் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும் கவனம் செலுத்திய விடுதலைப்புலிகள் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த வேளை முக்கிய வேலையாக அதனை எடுத்து முஸ்லீம் பிரதிநிதிகளை அழைத்து அதற்கு வருத்தம் தெரிவித்ததோடு மீண்டும் முஸ்லீம்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு ஒப்பந்தமும் கைச்சாத்திட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதுபோலவே கடந்தவாரம் வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடந்த 30வருடமாக போராடி என்னத்தை கண்டீர்கள் என த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் வெளிப்படையாக பேசிய நிலையில் அடுத்தவாரம் சம்பந்தன் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  நடைபெற்று முடிவுற்ற தமிழின அழிப்பு தொடர்பிலோ அல்லது கடந்த ஆண்டுகளில் கொல்லப்பட்ட பல்லாயிரம் மக்களை நினைவுகூர்ந்து முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொண்டு ஒரு மலர்தூவி அஞ்சலி செலுத்தாத சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகள்மீது வெளிப்படையாகவே தமது கண்டனங்களை வெளியிட்டுவருவது த.தே.கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்ளுக்கு மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது.


  தொடர்புடைய முன்னைய பதிவுகள்


  1.அண்மையில் வவுனியால் கலந்துகொண்ட சுமந்திரனின் கருத்து

  2.இராணுவத்தினரை கௌரவித்து நினைவுகூரும் பொப்பிமலருடன் சுமந்திரன்!
  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: புலிகள் இனவழிப்பு செய்தனராம் கொழும்பில் விழா எடுக்கிறார் சம்பந்தன்(ஆதாரம்) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top