யாழ்.வீரசேகரி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் - THAMILKINGDOM யாழ்.வீரசேகரி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் - THAMILKINGDOM
 • Latest News

  யாழ்.வீரசேகரி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்


  யாழ்ப்பாணத்தில் செயற்படும் முன்னணி பத்திரிகையான வீரகேசரின் அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், புகையிரத நிலைய வீதியிலுள்ள வீரசேகரியின் அலுவலம் மீது போத்தலொன்றை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

  யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக ஆவா குழுவினரின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

  சில தினங்களுக்கு முன்னர் ஆவா குழுவினர் நடத்திய வாள் வெட்டு தாக்குதலில் தேசிய புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் காயமடைந்திருந்தனர்.

  அத்துடன் வட மாகாணத்தில் பணியாற்றும் தமிழ் பொலிஸார் பதவி விலக வேண்டும் அல்லது வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும் என பிரபாகரன் படை என பெயர் கொண்ட குழு நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: யாழ்.வீரசேகரி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top