தமிழர்களை நிம்மதியாக வாழவிடமாட்டோம்! (காணொளி)
ஸ்ரீலங்காவில் சிங்கள மக்களை அச்சத்தில் உறையச்செய்துவிட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இழைத்த தவறுகளை தற்போது உணர்ந்துவிட்டதாக தெரிவிக்கும் பெசில் ராஜபக்ச, தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.








