சித்தார்த்தனுக்கு தலைவர் பதவி..!! அரசின் புதிய திட்டம் அம்பலம்
புதிய அரசியலமைப்பு தொடர்பான செயற்பாடுகளின் ஊடாக சித்தார்த்தன்போ ன்றவர்களுக்கு தலைவர் பதவிகளை வழங்கி நாட்டினை பிளவுபடுத்தும்செ யற்பாட்டினை இந்த அரசாங்கம் முன்னெடுப்பதாக ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தேசப்பற்றுள்ள தேசிய பிக்குகள் முன்னணியின்தலைவரான பென்கமுவே நாலகதேரர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தினை அரசியலமைப்புச் சபையாக மாற்றி இந்த அரசாங்கம் புதியஅரசியலமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தற்போது இந்தஅரசியலமைப்பு சபையில் 6 உபகுழுக்கள் அமைக்கப்பட்டு அரசியலமைப்புசெயற்பாடுகளை இந்த அரசாங்கம் இரகசியமாக முன்னெடுத்து வருகிறது. மக்களின்எதிர்பார்ப்புக்கு எதிராக சென்றே இந்த அரசாங்கம் அரசியலமைப்பு நடவடிக்கைகளைமுன்னெடுத்துவருகின்றது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர்ஸ்தானிகரின் அறிக்கை,அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஆகியவற்றில்புதிய அரசியலமைப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்தப் புதியஅரசியலமைப்பு தொடர்பான செயற்பாடுகளின் ஊடாக சித்தார்த்தன்போன்றவர்களுக்கு தலைவர் பதவிகளை வழங்கி நாட்டினை பிளவுபடுத்தும்செயற்பாட்டினை இந்த அரசாங்கம் கொண்டு செல்கின்றது.
தற்போது சர்வதேசத்தின் தேவைக்கு ஏற்றாற்போல புதிய அரசியலமைப்புஆங்கிலத்தில் வரையப்பட்டு வருவதாக எமக்கு தெரியவந்துள்ளது. இந்த அரசாங்கம்புதிய அரசியலமைப்பொன்றினை வரைவதானால் அது சிங்கள மொழியிலேயேவரையப்பட வேண்டும். சிங்கள மொழியில் வரையப்பட்ட பின்னரே, அந்த சட்டவரைபுஆங்கிலத்திலும், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.








