Breaking News

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்கள்!

வடக்கில் அண்மைய நாட்களாக பெய்துவரும் மழையினால் பெரும்பாலான மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.


யாழமாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களிலும் மழை பெய்து வருகிறது. அத்துடன் கிளிநொச்சி, வவுனியா,மன்னார், முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் மழை விடாமல் பெய்து வருகின்றமையால் அங்கிருக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களான வடக்கின் முல்லைத்தீவு மாவட்டம், மன்னார், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்கள் பெருபாலானோர் இன்னமும் தகரக் கொட்டகைகளிலேயே வாழ்கின்றனர்.

தொடர்மழை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களின் பெரும்பகுதி நீரில் மூழ்கியுள்ளது. குளங்கள்,ஆறுகள் எல்லாம் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

ஏ9 வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கின்றது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கரையோரப்பகுதிளில் தாழ்நிலப் பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.