Breaking News

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர உறவினர்களுக்கு சுதந்திரமுள்ளது





யுத்தத்தின் போது அல்லது மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டத்தின் போது உயிரிழந்த வர்களை நினைவுகூர்வதற்கு உறவினர்க ளுக்கு சுதந்திரமுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைக் கூறினார்.

LTTE அமைப்பினரால் திட்டமிடப்பட்டு நிகழ்வொன்று முன்னெடுக்கப்படுகின்றதெனில், அவ்வாறான நிகழ்வுகளுக்கு இந்த நாட்டில் இடமில்லை என குறிப்பிட்ட லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டங்களின் போதோ யுத்தத்தின் போதோ உயிரழந்தவர்களை, அவர்களது பெற்றோர்கள் தனிப்பட்ட ரீதியில் நினைவுகூர நாட்டில் ஜனநாயக ரீதியிலான சுதந்திரமிருப்பதாக சுட்டிக்காட்டினார்.