Breaking News

இராணுவ சதிப் புரட்சி ஏற்படும் சாத்தியக்கூறு காணப்படுகிறது – தினேஷ் எச்சரிக்கை



நாடு தற்பொழுது எதிர்கொண்டிருக்கும் நிலைமையை பார்க்கும் போது இராணுவ சதிப் புரட்சியொன்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எச்சரித்துள்ளார்.

வரவு-செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் முதலாம் நாள் விவாதத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே, இராணுவ சதிப் புரட்சியொன்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

அவருடைய இந்தக் கருத்தைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பியதுடன், எதிர்த்தரப்பிலிருந்த ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் பதிலுக்குக் குரல் எழுப்பியதால் சிறிது நேரம் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.