Breaking News

யுத்த நிறைவுக்கு பாகிஸ்தான் உதவி செய்தது - அம்பலப்படுத்தும் மஹிந்த



யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பாகிஸ்தான் எமக்கு பல வழிகளிலும் செய்த உதவியை நன்றியுடன் நினைவு கூறுகிறோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ராஜா பர்வீஸ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதம அமைச்சர் ராஜா பர்வீஸ் அஷ்ரப் மற்றும் அவரது பாரியார் பேகம் நுஷ்ரத் அஷ்ரப் அவர்களும் நேற்று (22) காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராமையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

இதன் போது பாகிஸ்தான் முன்னாள் பிரதம அமைச்சர் நாட்டின் இங்குள்ள நிலமைகள் பற்றி மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவிய போது, இன்று நான் யுத்தத்தை வென்றெடுத்தேன். ஆனால் இரண்டாவது உலகமகா யுத்தத்தை வென்ற வின்ஸன் சேர்சிலுக்கு நடந்த கதைதான் எனக்கு நடந்தது. எனவே மக்கள் இப்போது நிலமையை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, முஸ்லிம் முன்னணிகளின் செயலதிபரும் முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக லொக்குபண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.