வரவு செலவுத் திட்டம் எதிராக வாக்களிக்க கூட்டு எதிர்கட்சி தீர்மானம்
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கூட்டு எதிரணி வாக்களிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு தேவையான எந்தவொரு விடயங்களும் உள்ளடக்கப்படவில்லையென தெரிவித்த அவர், இதனால் கூட்டு எதிரணி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஊழியர் சேமலாப நிதியத்தில் நல்லாட்சி அரசாங்கம் கைவைக்க முயற்சிக்கின்றமை எந்தவொரு அரசாங்கமும் செய்யாத விடயம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.








