உயிர் நீத்த ஆத்மாக்களுக்க அஞ்சலி செலுத்தும் உரிமை உறவுகளுக்கு உண்டு – மாவை
உயிர் நீத்த ஆத்மாக்களுக்க அஞ்சலி செலுத்தும் உரிமை உறவுகளுக்கு உண்டு இதனை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வித்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இனப் போரில் போராளிகள் உள்ளிட்ட பொது மக்கள் இலட்சக் கணக்கானோர் தம்முயிரை அர்ப்பணித்துள்ளனர்.
அவ்வாறு உயிர் நீத்த உறவுகளுக்காக கண்ணீர் வருவதும்,அஞ்சலி செலுத்துவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். இவ்வுரிமை மனங்களுக்கு, ஆத்மாக்களுக்கு ஆறுதல் தருவதாகும்.
மத நம்பிக்கை கொண்ட மக்கள் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவது மட்டுமல்ல ஈமைக்கடன் செய்வதும் அவரவர் நம்பிக்ககையின் படி பாரம்பரியம் ஆகும். கடமையுமாகும்.
இதில் வெற்றி தோல்வி என்ற பரிசீலனைக்கு இடமில்லை.தெற்கு வடக்கு என்ற வேறுபாடில்லை. அதில் மனித குலத்தின் அடிப்படை உரித்தே முக்கியமானதாகும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அனைவரும் மனித நேயத்துடன் தங்களுக்கேற்றவாறு அஞ்சலி செலுத்துவதே உயர்ந்த பண்பும் நாகரிகமும் ஆகும்.
எனவே இன்றுள்ள சூழ்நிலைகளை மதிப்பிட்டு எந்த சன்னதங்களுக்கும் இடங்கொடுக்காமல் அமைதியான முறையில் கோவில்களில், வீடுகளில் நீர்நிலைகளில், நினைவிடங்களில் அஞ்சலி செலுத்துமாறும் ஈமைக்கடனை நிறைவேற்றமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
மாவை.சோ.சேனாதிராசா
தலைவர்- இலங்கைத் தமிழரசுக் கட்சி
துணைத் தலைவர் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு








