9 மாகாண சபைகளுக்குரிய நிதி கிடைக்கும் – முதலமைச்சர்களிடம் ஜனாதிபதி
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான நிதியை குறைவின்றி பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ஆகியோரின் தலைமையில் நேற்று பிற்பகல் 9 மாகாணங்களினதும் முதலமைச்சர்கள் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.








