24 மணி நேரத்துக்குள் அம்பலப்படுத்துவேன்- பசிலுக்கு, டிலான் பெரேரா சவால்
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மக்கள் எதிர்பார்க்காத விதத்தில் அரசியல் குண்டொன்றை வெடிக்கச் செய்வதற்கு பசில் ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவொன்றுடன் இரகசியப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பிலான சகல தகவல்களையும் எதிர்வரும் நாட்களில் வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பசில் ராஜபக்ஷ என்னுடன் சவால் விடுப்பாரா்க இருந்தால், அடுத்த 24 மணி நேரத்துக்குள் இரகசியங்களை வெளியிட நான் தயாராகவுள்ளேன் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக்கும் ஒப்பந்த நடவடிக்கையை பசில் ராஜபக்ஷ செயற்படுத்தி வருகின்றார். இவருக்குத் தேவையான முறையில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மாற்றமொன்றைக் கொண்டுவர ஐ.தே.க.யின் குழுவொன்று பசிலுக்கு வாக்களித்துள்ளதாகவும் டிலான் பெரேரா மேலும் தெரிவித்தார்.








