Breaking News

பிரித்தானியாவில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு(படங்கள்)


 அடிமைகளாய் வாழ்வதை விட சண்டையிட்டு சாவதே மேல்

எனும் எம் தேசிய தலைவரின் வார்தைக்கிணங்க எம் இனத்தின் விடுதலைக்காகவும்,எம் நிலத்தை சிங்கள காடையரிடம் இருந்து மீட்பதற்காகவும் தங்களது உணர்வுகளையும்,உயிரையும் துச்சமென மதித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட எம் மாவீரச்செல்வங்களின் நினைவாக "தேசம் காத்தோர் கனவு சுமந்து"எனும் தலைப்பின் கீழ் பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் (Edgware Community Hospital,Burnt Oak Broadway,Edgware' Middx.HA8 0AD)எனும் இடத்தில் 20.11.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

இதில் பல நாடுகடத்த அரசாங்க செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு இரத்தான நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தியிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.







நாம் பயங்கரவாதிகள் அல்ல நாமும் மனித நேயர்கள் என்பதனை இவ்வுலகிற்கு இக்குருதிக்கொடை நிழ்வின் மூலம் எடுத்துக்காட்டி மாவீரர்களது நினவுகளை மனதில் சுமந்தவாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழம் நோக்கி அணிவகுத்துச் செல்வோம்..

*தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்*

முன்னைய நிகழ்வுகளை காண

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்