Breaking News

புதிய பூங்காவின் ஊஞ்சல் பாறி விழுந்தது சிறுவர்கள் காயம்(படங்கள்)


அண்மையில் வவுனியாவில் திறந்துவைக்கப்பட்ட பொதுப்பூங்காவின் சிறுவர் ஊஞ்சல் ஒன்று சிறுவர்கள் ஊஞ்சல் ஆடியபோது அது பாறி விழுந்துள்ளது.

வவுனியா நகரசபை பூங்காவில் இன்று மாலை கம்பியால் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் மூன்று சிறுவர்கள் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் ஊஞ்சல் அடியோடு உடைந்து வீழ்ந்ததில் இரு சிறுவர்கள் தெய்வதீனமாக காயங்களின்றி தப்பியதுடன் வவுனியா தமிழ் மத்திய மாகா வித்தியாலயத்தினை சேர்ந்த 11 வயது சிறுவன் காயமடைந்துள்ளார்.

இந்த பூங்கா நெல்சிப் திட்ட நிதியுதவியுடன் வவுனியா நகரசபையில் பங்களிப்பு நிதியுடனும் ஒன்பது மில்லியன் ரூபா செலவில் வவுனியா நகரசபையினரால் அமைக்கப்பட்டு வடமாகாண முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வடமாகாணசபை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படுவதோடு இந்த கட்டுமான வேலைகளை செயற்படுத்தியவர்களையும் மேற்பார்வை செய்தவர்களை விசாரணைகளுக்கு உள்ளாக்குவதோடு குறித்த பூங்காவின் அனைத்து கட்டுமானப்பணிகளையும் மீள் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

அத்தோடு வடமாகாணசபையில் எல்லைக்குட்பட்ட கட்டுமான வேலைகளை மேற்பார்வை செய்வதற்கும் அதனை கண்காணிப்பதற்கும் முதலமைச்சரால் ஒரு தொழில்நுட்ப பிரிவினை அமைக்க வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.



தகவல் உதவி-கிருஸ்ணகோபால்

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்