முல்லைத்தீவு மாணவன் கடத்தப்பட்டிருக்கலாம் தந்தை சந்தேகம்(காணொளி) - THAMILKINGDOM முல்லைத்தீவு மாணவன் கடத்தப்பட்டிருக்கலாம் தந்தை சந்தேகம்(காணொளி) - THAMILKINGDOM

 • Latest News

  முல்லைத்தீவு மாணவன் கடத்தப்பட்டிருக்கலாம் தந்தை சந்தேகம்(காணொளி)

  புதுக்குடியிருப்பில் 2ம் வட்டாரத்தை சேர்ந்த 13 வயது மாணவனை கடந்த 15ம் திகதியிலிருந்து காணவில்லை என தந்தையாரால் 16ம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  பொலீசார் குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக காணாமல்போன மாணவனின் தந்தையார் தனது காணொளிப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


  புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைச்சேர்ந்த சுந்தர்லிங்கம் யோன்சன் வயது 13 என்ற மாணவனை கடந்த 15 ம் திகதி முதல் காணவில்லை என அவரது தந்தையாரால் புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


  இந்த சிறுவனின் தந்தையாரான சுந்தரலிங்கம் என்பவர் மாற்றுத்திறனாளி என்பதோடு இந்த மாணவனின் தாயாரை செல்வீச்சின்போது பறிகொடுத்தும் 3பெண் சகோதரர்கள் பராமரிப்பு இல்லங்களிலும் வாழ்ந்துவருவதோடு சகோதரன் ஒருவன் கடந்த 2015ஆம் ஆண்டு வற்றாப்பளை பொங்கல் திருவிழாவின்போது காணாமல் போயிருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான தந்தையாரை இந்த சிறுவனே பராமரித்து வந்ததாக  தமிழ்கிங்டொத்தில் முல்லைத்தீவு பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: முல்லைத்தீவு மாணவன் கடத்தப்பட்டிருக்கலாம் தந்தை சந்தேகம்(காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top