மகசின் சிறையில் விமல் வீரவன்ச உண்ணாவிரதம் - THAMILKINGDOM மகசின் சிறையில் விமல் வீரவன்ச உண்ணாவிரதம் - THAMILKINGDOM

 • Latest News

  மகசின் சிறையில் விமல் வீரவன்ச உண்ணாவிரதம்  மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

  கடந்த 74 நாட்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவின் பிணை மனு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே நேற்றுக்காலையில் இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

  இதையடுத்து நேற்று சிறைச்சாலையில் விமல் வீரவன்சவைச் சென்று பார்வையிட்ட கூட்டு எதிரணி உறுப்பினர்கள் பலர் விமல் வீரவன்சவிடம் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரியுள்ளனர்.

  மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றிய போது, அரச வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச ஏப்ரல் 3ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மகசின் சிறையில் விமல் வீரவன்ச உண்ணாவிரதம் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top