ரஜனியின் வருகைக்கு முதலமைச்சர் எதிர்ப்பு! - THAMILKINGDOM ரஜனியின் வருகைக்கு முதலமைச்சர் எதிர்ப்பு! - THAMILKINGDOM

  • Latest News

    ரஜனியின் வருகைக்கு முதலமைச்சர் எதிர்ப்பு!


    ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணம்
    வருகின்றார் என்கிற செய்தி வந்ததிலிருந்து அதற்குக் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்திருந்த நிலையில் அந்த நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சரும் தனது எதிர்ப்பினை வெளிக்காட்டி நிகழ்வினை புறக்கணித்துள்ளார் என தெரியவருகின்றது.

    தமிழ்த் தேசிய உணர்வுகளை மழுங்கடித்து சினிமா மோகத்திற்குள் ஈழத்தமிழர்களை தள்ளுவதன் ஊடாக அவர்களின் அரசியல் அபிலாசைகளை மழுங்கடிப்பதற்கு முதலமைச்சர் ஒருபோதும் துணைபோகமாட்டார் என முதலமைச்சு வட்டாரங்களிலிருந்து தமிழ்கிங்டொத்திற்கு அறியக்கிடைக்கின்றது.

    ஐ.நா தீர்மானம்,காணாமல் போனோர் பிரச்சனை,எழுக தமிழ் எழிச்சி ஆகியவற்றை மழுங்கடிக்கும் நோக்குடன் காலம் பார்த்து காத்திருந்த சக்திகள் சினிமாவில் பிரபலமான ஒருவரை அழைப்பதன் ஊடாக தமது கைங்கரியத்தை ஆரம்பித்து வைப்பதற்கு தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது என்பதை ரஜனிக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் இவ்வாறான நகர்வுகளை மோற்கொள்ளும் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதையும் இங்கு சுட்டிக்காட் விரும்புகின்றோம்.

    ஏற்கனவே இந்த வீடமைப்பு திட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனும் முன்னாள் ஜெனாதிபதி சந்திரிக்காவும் விமானம் மூலம் வவுனியா வந்து அடிக்கல் நாட்டியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அடிக்கல் நாட்டியது சந்திரிக்கா என்பதைவிட  இந்த வீட்டுத்திட்டம் வவுனியா சின்னஅடம்பனில் கட்டப்பட்ட வீடுகளை கையளிப்பதற்கு எதற்காக யாழ்ப்பாணத்தில் அந்த நிகழ்வுகளை செய்ய முற்பட்டுள்ளார்கள் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இதேவேளை ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணம் செல்கிறார் என்கிற செய்தி வந்ததிலிருந்து அதற்குக் கடும் எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மே பதிக் ஏழு இயக்கத்தின் தலைவர் திருமுருகள் காந்தி ஆகியோர் பகிரங்கமாக ரஜினி யாழ்ப்பாணம் செல்லக்கூடாது என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


    தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தால் நல்லது என ஈபி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக தொடர் போராட்டங்களை பல்வேறு இடங்களில் முன்னெடுத்துள்ள நிலையில், 150 வீடுகளை கையளிப்பதற்காக மாத்திரம் வர வேண்டிய அவசியம் என்ன என்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.


    முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்






    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ரஜனியின் வருகைக்கு முதலமைச்சர் எதிர்ப்பு! Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top