Breaking News

சிங்கக்கொடி சம்பந்தன் நாளை முள்ளிவாய்க்கால் வருகிறார் !

மே 18 நாளை முள்ளிவாய்க்காலில் சிங்கள
பேரினவாதத்தால் காவுகொள்ளப்பட்ட மக்களினதும் போராளிகளினதும் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் இலங்கையின் எதிர்கட்சித்தலைவர் சிங்கக்கொடி புகழ் சம்பந்தன் கலந்து கொள்ளவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும்முகமாக கொழும்பிலிருந்து புறப்பட்ட சம்பந்தன் வவுனியாவில் புகழ்பெற்ற வசந்தி விடுதி(லொச்ட்)இல் இன்று தங்கியிருப்பதாகவும். நாளை நிகழ்வில் எவ்வாறு பிரசன்னமாவது பற்றியும் மக்கள் எதிர்ப்புக்கள் வந்தால் அதனை விசேட அதிரடிப்படையை கொண்டு எப்படி தப்பிக்கொள்வது பற்றியும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

வழமையாக முள்ளிவாய்க்கால் நிகழ்வினை வடமாகாண முதலமைச்சரே தலைமையேற்று நடாத்திவந்ததோடு நிகழ்வின் நினைவுரையின்போது தமிழரசுக்கட்சி தலைமைப்பீடத்தை கடுமையாக சாடியும் வந்திருந்தார். 

இதேவேளை சம்பந்தன் நிகழ்வுக்கு வருவதால் நிகழ்வு பொறுப்பை தமிழரசுக்கட்சி பெற்றுக்கொள்வதற்கும் முயற்சிக்கப்பட்டுவருவதாகவும் அதன் ஒருகட்டமாக நிகழ்வு ஏற்பாட்டளரான மாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் பேசிய அவைத்தலைவர் சிவஞானம் நாளை மைக்கை என்னிடம் தரவேண்டும் என கட்டளை இட்டுள்ளதாகவும் த.தே.கூட்டமைப்பு தரப்பிலிருந்து அறியவருகின்றது.

எழு ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களிலோ அல்லது அவர்களின் நினைவு வணக்க நிகழ்வுகளான முள்ளிவாய்க்கால் படுகொலையோ அல்லது மாவீரர் தினங்களிலோ கலந்துகொண்டு ஒரு பூ போடாத சம்பந்தன் இப்போது வருவது எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை மையப்படுத்தியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இது தொடர்பான முகநூல் பதிவும் இணைக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்துகொண்டிருந்த போது கண்களை மூடிக்கொண்டு விடுதலைப்புலிகளினதும்,மக்களினதும் உயிரிழப்புக்களை தடுக்காமல் இந்தியாவில் குடிகொண்டு விட்டு எல்லாம் முடிந்த பின்னர் நீலிக்கண்ணீர் விட்ட சம்பந்தன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு பிறகு முள்ளிவாய்க்கால் நிகழ்விற்கு வருகைதரவுள்ளதாக தமிழரசுக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது.

1956 ஆம் ஆண்டுக்குப்பின்னர் இலங்கையின் தமிழ்த்தலைவர்கள் யாருமே கலந்து கொண்டிராத சிங்கள பௌத்த சுதந்திரதினத்தில் பங்கெடுத்து தமிழர்கள் மீது சிங்களப்படைகள் நடத்திய இன அழிப்புப்போரை நியாயப்படுத்திய சம்பந்தன் இப்பொழுது ஏன் முள்ளிவாய்க்கால் வருகிறார்?

முள்ளிவாய்க்கால் இன அழிப்புப்போரின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் தாயகமெங்கும் 100 நாட்களை எட்டப்போகும் தருவாயில் கூட ஒரு நாள் அந்த உறவுகளுக்கு ஆறுதல் வார்த்தை தெரிவிக்காமல் அவர்களின் போராட்டத்தை எட்டிக்கூடப்பார்க்காமல் அவர்களின் போராட்டத்திற்கு ஒரு தீர்க்கமான பதில் சொல்லாமல் இப்பொழுது ஏன் சம்பந்தன் முள்ளிவாய்க்கால் வருகிறார்?

முள்ளிவாய்க்காலில் சிங்கள பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்டது இன அழிப்புத்தான் என்தற்கு எத்தனையோ ஆதாரங்களை எமது மக்கள் வைத்திருந்த போதும்,முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை இல்லை அதற்கான ஆதாரங்கள் இல்லை என்ற சுமந்திரனின் வாதத்திற்கு இன்றுவரை எதிர்ப்புத் தெரிவிக்காத சம்பந்தன் ஏன் முள்ளிவாய்க்கால் வருகிறார்?

முள்ளிவாய்க்கால் இன அழிப்புப்போர் தொடர்பான சர்வதேச விசாரணை முடிந்து விட்டது. இனி உள்நாட்டு விசாரணைதான் இருக்கிறது என இமாலயப்பொய் கூறி சிங்கள அரசை காப்பாற்றிய சம்பந்தன் இப்பொழுது ஏன் முள்ளிவாய்க்கால் வருகிறார்?

இது நாள்வரையும் இலங்கை பாராளுமன்றத்தில் 2008 இல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு எந்த நீதியும் கேட்காத சம்பந்தன் இப்பொழுது மட்டும் ஏன் முள்ளிவாய்க்கால் வருகிறார்?
இன அழிப்புப்போரில் ஈடுபட்ட அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கி நல்லாட்சிக்கு ஒத்தூதும் சம்பந்தன் இப்பொழுது ஏன் முள்ளிவாய்க்கால் வருகிறார்?

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசுக்கு கிடைக்காமல் இருந்த GSP+ வரிச்சலுகையை தன்ணுடைய சகாவை அனுப்பி இலங்கை அரசுக்கு பெற்றுக்கொடுத்த சம்பந்தன் இன அழிப்பு நடந்த முள்ளிவாய்க்காலுக்கு ஏன் வருகிறார்?

நாடு பற்றியெரிந்த போது பிடில் வாசித்த மன்னனைப்போல நாங்கள் செத்துக்கொண்டிருந்தததை வேடிக்கை பார்த்த சம்பந்தன் ஏன் இப்போது முள்ளிவாய்க்கால் வருகிறார்?

இவ்வாறு ஆயிரம் கேள்விகளை சம்பந்தனையும்,சம்பந்தனின் சகாக்களையும் நோக்கி கேடகிறேன். முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் சிக்குண்டு சின்னாபின்மாக 8 ஆண்டுகளைக்கடந்தும் இன்றும் தெருக்களில் ஏதிலிகளாக அலையும் மக்களின் தேவைகள், அவர்களின் மீள்வாழ்வு, பற்றி எதுவுமே சிந்திக்காத சம்பந்தனும் அவரது சகாக்களும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தங்களுக்கு சார்பாக மாற்றும் கபட நோக்கத்திலேயே இந்தத்திட்டம் அரங்கேற்றப்படுகிறது.

இது நாள்வரையும் தமிழ் மக்களுக்கு பல்வேறு விரோத செயற்பாடுகளை கொண்டிருந்த சம்பந்தனும் அவர்தம் சகாக்களும் தம்மீது ஏற்பட்டுள்ள அதிர்தியை முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் சிந்திய இரத்தத்தை அள்ளிப்புசிக்கொள்வதற்கு முற்படுகின்றனர். முள்ளிவாய்கால் மண்ணை அரசியல் களமாக மாற்றத்துடிக்கும் அரசியல் முகவர்களே! விடுதலைக்காக போராடி மடிந்த அத்தனை உறவுகள் சார்பாகவும், எதற்காக சாகிறோம், எதற்காக கொல்லப்படுகிறோம் என்று எதுவுமே தெரியாமல் கொத்துக்கொத்தாய் மடிந்த எங்கள் மக்களின் ஆண்மாக்களின் மீது சாட்சியாக சொல்கிறேன். எங்களின் உயிர்தியாகங்களில் அரசியல் செய்யும் உங்கள் அரன்மனைகளில் இடி விழும். உங்கள் சந்தததியே சபிக்கப்படும். உங்களின் சாவு கூட உங்களுக்கு விமோசனம் தராது. நீங்கள் அனைவரும் நரகத்தில் வாழ்வீர்கள்.

-சிவகரன்-

தொடர்புடைய முன்னைய பதிவு


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்