சத்தியலிங்கத்தை முதல்வராக்க திட்டம்-களம் இறங்கியது தமிழரசு - THAMILKINGDOM சத்தியலிங்கத்தை முதல்வராக்க திட்டம்-களம் இறங்கியது தமிழரசு - THAMILKINGDOM
 • Latest News

  சத்தியலிங்கத்தை முதல்வராக்க திட்டம்-களம் இறங்கியது தமிழரசு

  வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவந்தது சுகாதார அமைச்சராக இருந்த சத்தியலிங்கத்தை முதல்வராக்கும் முயற்சியில் தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் தலைப்பீடமும் களம் இறங்கியுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தமிழ்ங்டொத்தின் விசேட செய்தியாளருக்கு கிடைத்துள்ளது.

  மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சிலரே முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் இதற்காக 20 உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுமாறு தமிழரசுக்கட்சி தலைமைப்பீடம் கட்டளை பிறப்பித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

  முதல்கட்டமாக 15பேரின் பெயர்கள் திரட்டப்பட்டுள்ளதோடு மேலும் ஐவரை திரட்டும் முகமாக ரெலோ கட்சியின் உதவி பெறுவதற்கான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.

  இன்றைய முதலமைச்சரின் உரையிலும் முதலமைச்சர் மத்திய அமைச்சர்களுடன் சேர்ந்து செயற்படுவதாக சத்தியலிங்கத்தின்மீது குற்றம்சாட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

  திட்டம் சாதகமானால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாகவும் அது தவறினால் ஆளுனரைக்கொண்டு முதல்வரை மாற்றும் தீர்மானத்தை கொண்டுவருவதற்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிகின்றது.

  இவர்களின் நிலமை மோசமானால் முதலமைச்சர் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் முதலமைச்சரின் தலைக்கு மேலாக திட்டங்கள் வகுக்கப்பட்டு விட்டன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றபோதும் நிலமை எல்லை மீறிப்போனால் தமிழரசுக்கட்சி தனது மாகாணசபையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கின்றது எனக்கூறி முதலமைச்சர் சபையை கலைக்கும் செயற்பாட்டில் இறங்குவார் எனவும் விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

  தொடர்புடைய செய்தி
  விக்கினேஸ்வரனுக்கு எதிராக கறுப்பாடுகள் புகுந்தது எப்படி?-சிறிதரன் விளக்கம்(காணொளி)

  முதலமைச்சரையும் வீட்டுக்கு அனுப்புவோம் மாவை முழக்கம்

  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: சத்தியலிங்கத்தை முதல்வராக்க திட்டம்-களம் இறங்கியது தமிழரசு Rating: 5 Reviewed By: Tamilkingdom LK
  Scroll to Top