கணவன் விடுவிக்கப்படாவிட்டால் சாகும்வரை உண்ணா விரதம்: அரசியல் கைதியின் மனைவி! - THAMILKINGDOM கணவன் விடுவிக்கப்படாவிட்டால் சாகும்வரை உண்ணா விரதம்: அரசியல் கைதியின் மனைவி! - THAMILKINGDOM
 • Latest News

  கணவன் விடுவிக்கப்படாவிட்டால் சாகும்வரை உண்ணா விரதம்: அரசியல் கைதியின் மனைவி!

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது ஆட்சியை நல்லாட்சி என கூறிக்கொண்டு என் கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி சிறையிலடைத்தது மட்டுமல்லாமல், என் 15 வயது மகனை மேசன் தொழிலாளி ஆக்கி ஒரு பாடசாலை சிறுவனின் எதிர்காலத்தையே அழித்துவிட்டார்” என அரசியல் கைதியின் மனைவி ஜோசப் செபஸ்தியன் றீற்றா கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

  யாழ்.ஊடக அமையத்தில் நேற்று(சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடா்ந்தும் கருத்து தெரிவித்து அவா் மேலும் தெரிவிக்கையில், உண்மையில் இங்கே நடப்பது நல்லாட்சி என்றால் என் கணவனை விடுதலை செய்யுங்கள்.

  என் மகனின் எதிர்காலத்தை பாதுகாத்து கொடுங்கள் எனவும் அவர் உருக்கமாக கோரிக்கை விடுத்ததிருந்ததுடன், தங்களது கோரிக்கையை பரீசீலித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் உதாசீனம் செய்தால் சாகும் வரையான உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொள்ள தீா்மானித்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கணவன் விடுவிக்கப்படாவிட்டால் சாகும்வரை உண்ணா விரதம்: அரசியல் கைதியின் மனைவி! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top