இனியும் ஏமாற முடியாது; கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எங்கே ? - THAMILKINGDOM இனியும் ஏமாற முடியாது; கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எங்கே ? - THAMILKINGDOM
 • Latest News

  இனியும் ஏமாற முடியாது; கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எங்கே ?

  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று கிளிநொச்சி கந்தசு வாமி ஆலயத்திற்கு அருகில் ஆரம்ப மான கவனயீர்ப்பு போராட்டம் ஊர்வ லமாக  கிளிநொச்சி மாவட்ட செயல கம் வரை நகர்ந்து மாவட்ட செயல கத்தைச் சென்றடைந்தது. 

  கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணி யுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் தொடர்ந்து வருகின்றமையுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவட்ட செயலக முன்றலில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

  பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள், தமது உறவுகள் தொடர்பில் தீர்க்கமான பதில் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கோசங்களையும் எழுப்பிய வாறு போராடினார்கள். 

  எமது உறவுகள் எங்கே ?... எங்கள் கைகளால் உங்கள் கைகளில் சமர்ப்பித்த என் பிள்ளை எங்கே ? அரசே மௌனம் காக்காதே பதில் சொல்.  

  எமக்கு எம் உறவுகள் வேண்டும் !  எஞ்சியுள்ள எம் உறவுகளை எம்மிடம் கையளித்துவிடு அரசே உன் முடிவு தான் என்ன ? ......

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: இனியும் ஏமாற முடியாது; கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எங்கே ? Rating: 5 Reviewed By: tamil selvan
  Scroll to Top