யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவள மருத்துவம் தேவை – வடமாகாண முதலமைச்சர்! - THAMILKINGDOM யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவள மருத்துவம் தேவை – வடமாகாண முதலமைச்சர்! - THAMILKINGDOM
 • Latest News

  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவள மருத்துவம் தேவை – வடமாகாண முதலமைச்சர்!

  நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக எமது மக்கள் நடைப்பிணங்களாக வாழ்ந்து வரும் நிலை காணப்படு கின்ற விடயம் யாவரும் அறிந்த விட யம். அவர்களுக்கு உளவளத்துணை சிகிச்சை அவசியம் வழங்கி பாதுகா ப்பான முறையில் கையாள வேண்டிய அவசிய தேவையுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். முற்றா கக் குணப்படுத்துவதற்கு சிகிச்சை வழங்குவது அவசியமாகும். கிளிநொச்சி யில் மனநல மருத்துவமனையைத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

  மேலும் உளநலப் பிரச்சனைக்கு உள்ளாகிய பலருக்கு பிரச்சனையின் தாக்கம் உடனும் வெளிக்கொணரப்படுவதில்லை.. அவர்களின் குடும்பத்தினரால் கூட இதன் தாக்கத்தை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியாது.

  இவ்வாறானவர்களின் நோய்த் தாக்கம் அதிகரிக்கும்போது ஒன்றுடன் ஒன்று தொடர்புபடாத உரையாடல்கள், அளவுக்கதிகமான விளக்கங்கள் சில காலங்களுக்கு முன்னர் உளவியல் தாக்கங்களுக்கு உள்ளானவர்கள் சமூகத்திலிருந்து தனிமையாக்கி விடப்பட்டது தற்போது அப்படியில்லை. 

  இப்போது நிலமைகள் எவ்வளவோ முன்னேறி விட்டது. உள­நல சிகிச்சை தொடர்­பாக மருத்­து­வ­ம­னை­க­ளின் பணி­க­ளுக்கு மேல­தி­க­மாக தன்­னார்­வத் தொண்டு நிறு­வ­னங்­கள், பொது அமைப்­பு­கள் ஆகி­யன இவர்­களை அடை­யா­ளம் காண்­ப­தற்­கும் இவர்­க­ளுக்­கான உள­நல ஆலோ­ச­னை­களை வழங்­கு­வ­தற்­கும் முன்­வந்­துள்­ளன. 

  எனினும் வெளிநாடுகள் போல் உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக அடையாளங்காணப்பட்டு அவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்க அரசாங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவள மருத்துவம் தேவை – வடமாகாண முதலமைச்சர்! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top