Breaking News

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து விடயங்களும் தோல்வியே (காணொளி)

அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து விடயங்களிலும் தோல்வியே காணப்ப ட்டுள்ளது என சுவிட்ஸர்­லாந்தில் இயங்­கி­வரும் மனித உரிமை அமைப்பின் இலங்­கைக்­கான பிர­சார முகா­மை­யாளர் யுவேஸ் போவி தெரி­வித்­துள்ளார். 

அதி­கூ­டிய வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரை கொண்­டி­ருக்கும் நாடாக இலங்­கை முன்னிலையில் உள்ளது. 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் காணாமல் போனோர் அலு­வ­லகம் அமைப்­ப­தற்கு ஒரு மசோ­தாவை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­றி­யது. 

எனினும், இந் நாள்­வ­ரைக்கும் அது நிறு­வப்­ப­ட­வில்லை. வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் வழக்­கு­களை விசா­ரிக்க பணிக்கப்பட்ட எல்லா வகை­யி­லு­மான ஆணைக்­கு­ழுக்கள் இது­வ­ரைக்கும் எந்­த­வொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

மேலும் அறிக்­கையில் தெரி­வித்­துள்­ள­தா­வது ஆரம்ப காலத்தில் இருந்தே, இலங்­கையின் வடக்­கிலும் கிழக்­கிலும் உள்ள தெருக்­களில் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோருக்­காக இலங்­கையில் தமிழ் பெண்­களால் முன்­னெ­டுக்கப்படு­கின்ற எதிர்ப்பு போராட்­ட­மா­னது வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோருக்கு என்ன நடந்­தது மற்றும் எங்கே இந்த வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் இருக்­கின்­றனர், அவர்­களின் தலை­விதி. 

ஆகஸ்ட் 30 ஆம் திக­தியை, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் சர்­வ­தேச தினம் என பிர­க­டனம் செய்து, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பி­லான உண்­மைகள், அவர்­க­ளுக்­கான நீதி மற்றும் அவர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட இழப்­புக்­கான நல்­ல­தொரு பதி­லை­பெ­றுதல் ஆகி­ய­வற்­றினை இந்த எதிர்ப்­பு­போ­ராட்­டத்தின் கோரிக்­கை­யாக கொண்டு கிட்­டத்­தட்ட 200 நாட்­க­ளுக்கு தொடர தீர்­மா­னித்­துள்ளோம். 

இந்தப் பொன்­னான நாளில், அச்­சு­றுத்­த­ப்பட்­டுள்ள மக்­க­ளுக்­கான சங்கம் இல ங்கை தமிழ் பெண்­களின் எதிர்ப்பு போராட்­டத்தை ஆத­ரித்தும் மற்றும் தமிழ் பெண்­க­ளோடு ஒன்­றிணைந்து பெர்­ஸி­லுள்ள காசினோ பிளாட்ஸ் நகரில் ஒரு மாபெரும் எதிர்ப்பு போராட்­டத்தை நடாத்த தீர்மானித்துள்ளது. 

பல மாதங்­க­ளாக, இலங்­கையின் வடக்­கிலும் கிழக்­கிலும் உள்ள ஐந்து கிரா­மங்­களில் நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் பெண்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோருக்­காக எதிர்ப்பு போராட்­டங்­களில் ஈடு­பட்டு தங்­க­ளது உற­வு­க­ளுக்­காக குரல் எழுப்பி வருகின்றனர். 

இவர்­களின் இந்த குரல் ஒலி­யா­னது சுடும் சூரியன் எதிர்த்து நின்­றாலும், பாதை ஓரத்தின் அழுக்கு மற்றும் தூசு சிர­மமாய் மாறி­னாலும் இரவின் இருட்டு இடராய் இருந்­தாலும் இலங்­கையின் பாதை ஓரங்­களில் உற­வு­க­ளுக்காய் ஏக்கித்தவித்தவண்ணமுள்ளார்கள். 

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வுகள் எங்கு மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர் என்பது பற்­றிய பதில்­களைப் பெறு­வதையே தங்­களின் கோரி­க்கை­யாக முன்­வைத்­துள்­ளனர். உல­கி­லேயே இலங்­கை­யா­னது அதி­கூ­டிய வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரை கொண்­டி­ருக்கும் நாடாக இந்நாடு உள்ளது. 

யுத்தம் முடி­வ­டைந்­ததில் இருந்து அப்­பாவி மக்­களின் மர­ணத்­துக்கும் மற்றும் இழப்­பிற்கும் எந்­த­வொரு முடிவும் இன்னும் கிடைக்­க­வில்லை. இலங்கை அர­சாங்­க­மா­னது இன்­று­வரை வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் பிரச்­சனை தொடர்பில் தீர்­வு­காண எடுத்த எந்­த­வொரு முயற்சி­யிலும் தோல்­வி­யி­னையே கண்­டுள்­ளது. பொறுப்­பான அமைப்­புக்கள் நட­வ­டிக்கை எடுத்தால் என்ன ?...

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் காணாமல் போனோர் அலு­வ­லகம் அமைப்­ப­தற்கு ஒரு மசோ­தாவை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­றி­யது. 

எனினும், இந்த நாள்­வ­ரைக்கும் அது நிறு­வப்­ப­ட­வில்லை. வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் வழக்­கு­களை விசா­ரிக்க பணிக்க பட்ட எல்லா வகை­யி­லு­மான ஆணைக்­கு­ழுக்கள் இது­வ­ரைக்கும் எந்­த­வொரு வழக்­கு­க­ளையும் விசா­ரணை செய்து தீர்க்­க­வில்லை. 

நாட்டின் செய­லற்ற தன்மை கார­ண­மாக நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் பெண்கள் தெருக்­களில் ஆர்ப்­பாட்டம் நடத்­துகின்றனர். 2017ஆம் ஆண்டு, ஜூன்­மாதம் 26ஆம் திகதி, ஜனாதிபதி சிறிசேன, வலிந்து காணாமல் ஆக்­க­பட்டோர் தொடர்­பாக நீதி­கோரி எதிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களைச் சந்­தித்தார். 

இந்த எதிர்ப்பு போரா­டத்தில் ஈடு­ப­டுவோர் சிலர், அவர்­களின் கோரிக்­கைகள் அடங்­கிய விண்­ணப்­பத்தை இலங்கை அதி­பரின் கைகளில் ஒப்­ப­டைத்­தார்கள். இந்த சந்­திப்பின் முடிவில், கால அளவில் வலிந்து காணாமல் ஆக்­க­ப்பட்டோர் தொடர்­பான மூன்று பட்­டி­யல்­களை பத்­தி­ரி­கை­களில் வெளியீடு செய்­வ­தற்கு இணக்கம் தெரி­வித்தார். 

இவற்றுள் முத­லா­வது பட்­டி­ய­லா­னது 

இறுதி யுத்­தத்தின் முடிவில் யாரெல்லாம் சர­ண­டைந்­தார்­களோ 

மாற்றும் யாரெல்லாம் தடுப்­பு­கா­வலில் அடைத்து வைக்­க­பட்டு உள்­ளார்கள் என்­பதை பற்­றிய பெயர் பட்­டி­ய­லாகும், 

இரண்­டா­வது பெயர் பட்­டி­ய­லா­னது 

யாரெல்லாம் இர­க­சிய தடுப்­பு­காவல் நிலை­யங்­களில் தடுத்து வைக்­க­பட்­டி­ருப்­ப­வர்கள் பற்­றி­யது, மற்றும் 

மூன்­றா­வது பெயர்­பட்­டி­ய­லா­னது 

யாரெல்லாம் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின்கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்டு இருக்­கின்­ற­னரோ அவர்­களின் பெயர்­பட்­டியல். 

ஆனால் இன்­று­ வ­ரையும் இலங்கை அதிபர் தன்னை சந்­தித்து கோரிக்­கை­களை சமர்­ப்பித்த, இந்த வலிந்து காணாமல் ஆக்­க­ப்பட்டோர் தொடர்­பாக நீதி­கோரி எதிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு, தான் கொடுத்த வக்­கு­று­தியை நிறை­வேற்­று­வதில் தோல்­வி­யைச் சந்தித்துள்ளார்.  

"அர­சாங்­க­மா­னது இப்­போது வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோர்­காக எதிர்ப்பு போராட்­டங்­களில் ஈடு­ப­டு­வோரின் கோரிக்­கை­களை செயற்­ப­டுத்த வேண்டும், இதன் ஊடாக இலங்­கையில் இன, மத, மற்றும் மொழி என்­ப­வற்றால் வேறு­பட்­டி­ருக்கும் மக்­களுக்கிடையே நல்­லி­ணக்­கத்தை கொண்டுவரமுடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.