Breaking News

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ் நீதிமன்றத்தில்

வடக்கு மாகாணத்தின் முதலமை ச்சருக்கு எதிராக, மாகாணத்தின் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் எழுத்தாணை மனு ஒன்றினை நீதிமன்றில் மனுத்தா க்கல் செய்துள்ளார். முதலமைச்சர், தன்னை வடமாகாண அமைச்சு பதவியிலிருந்து நீக்கியது தவறு எனக் கருதியே பா.டெனீஸ்வரன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இதனைத் தாக்கல் செய்துள்ளார்.  

சட்டத்தரணி லிலாந்தி டி சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னா ண்டோவின் ஆலோசனைப்படியே மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார். முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தம்மிடமிருந்த அமைச்சுக்களைப் பகிர்ந்து இப்போது பதவி வகிக்கும் அமைச்சர்களான அனந்தி சசிதரன், க.சிவநேசன் ஆகியோருக்கு வழங்கியுள்ளார். 

ஆகவே தற்போது அந்த துறைகளுக்குரிய பதவி அமைச்சர்களாகச் செயற்படுகின்றமைக்கு இடைக்காலத் தடை விதிக்கும்படியும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.  

 இதன்படி தம்மை அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றியமைக்கு எதிராக உடனடியாக இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கும்படியும், உரிய விசாரணையின் பின்னர் அவ்வாறு வெளியேற்ற விடுத்த உத்தரவு முறைமை தவறானவை என்று பிரகடனப்படுத்தும் படியும் பா.டெனீஸ்வரன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

பா.டெனீஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களான க.சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், க.சிவநேசன், க.குணசீலன், முன்னாள் அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மற்றும் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஆகியோர் எதிர் மனுதாரர்களாகக் உள்வாங்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளார்.