இலங்கையுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்காவின் போர்க்கப்பல் கொழும்பில்! - THAMILKINGDOM இலங்கையுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்காவின் போர்க்கப்பல் கொழும்பில்! - THAMILKINGDOM

 • Latest News

  இலங்கையுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்காவின் போர்க்கப்பல் கொழும்பில்!

  ஐக்கிய அமெரிக்காவின் The Nimitz Carrier Strike Group என்ற மிகப் பெரிய போர் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தினை அடைந்துள்ளது. 

  இக் கப்பல் இம்மாதம் 31 ஆம் திகதி வரையில் இலங்கையில் நிற்குமெ னத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் கப்ப லின் நீளம் 333 மீற்றர் என்பதுடன், ஐயாயிரம் கடற்படையினர் தங்கக்கூ டிய வசதிகளை உடையது. 

  இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைக்கிடையில் தொடர்புகளை மேம்படு த்துவதே இந்த குழுவினரின் வருகை உறுதி செய்வதாக அரசாங்கம் தெரிவி த்துள்ளது. 

  இக் கப்பலின் உயரம் 23 மாடிகள் உயரமுடையது. அதேவேளை இக் கப்பலின் பயணம் மூலம் இலங்கைக்கு சுமார் 150 கோடி ரூபா பொருளாதார ரீதியில் நன்மை கிடைக்குமென  மதிப்பிடப்பட்டுள்ளது. 
  இதுபோன்ற கப்பல் ஒன்று ஏற்கனவே இலங்கைக்கு 1985ம் ஆண்டு வந்திரு ந்ததாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இலங்கையுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்காவின் போர்க்கப்பல் கொழும்பில்! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top