அரியாலை சூட்டில் இராணுவத்தினர் மீது சந்தேகம் – காணொளி ஆதாரம் வெளியீடு ! - THAMILKINGDOM அரியாலை சூட்டில் இராணுவத்தினர் மீது சந்தேகம் – காணொளி ஆதாரம் வெளியீடு ! - THAMILKINGDOM

 • Latest News

  அரியாலை சூட்டில் இராணுவத்தினர் மீது சந்தேகம் – காணொளி ஆதாரம் வெளியீடு !

  கடந்த 22ஆம் நாள் அரியாலையில் நடைபெற்ற துப்பாக்கிப் சூட்டினை இராணுவத்தினர் மேற்கொண்டிருக்க லாமென  சந்தேககித்ததுடன்  இத்தா க்குதலுக்கான வாகனங்கள் இரண்டும் மண்டை தீவு இராணுவ முகாமில் தரி த்திருந்தமைக்கான ஆதாரமும் காவ ல்துறையினரிடம் சிக்கியுள்ள நிலை யில், இராணுவத்தினருக்கு தொந்த ரவு அளிக்கசுடாதென  மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்துள்ளதாக காவ ல்துறையினர் குறிப்பி ட்டுள்ளனர். 

  சம்பவம் தொடர்பாக மேலும் 

  கடந்த 22ஆம் நாள் அரியாலையில் பிற்பகல் 3.30 மணியளவில் அரியா லையைச் சேர்ந்த டொன்பொஸ்கோ ரிட்மன் என்ற இளைஞன் சுட்டு படு காயங்களுக்குள்ளான நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பலனி ன்றி மறு நாள் உயிரிழந்துள்ளார். 

  குறித்த இளைஞனை உந்துருளியில் வந்த இருவரே சுட்டுக் கொன்றதாக சாட்சி பதிவாகியுள்ள நிலையில், காணொளிக் காட்சிகள் சிலவும் வெளி யாகியுள்ளன. 



  2.42 மணிக்கு (துப்பாக்கி சூட்டின் பின்) ரிக்மனை மோட்டார் சைக்கிளில் ஏற்றியபடி நண்பர்கள் செல்கிறார்கள்.

  மேற்படி காணொளிகளின் அடிப்படையில் விசாரணையை ஆரம்பித்த காவ ல்துறையினர் குறித்த பதிவுகளில் காணப்படும் உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டிகள் சிறிலங்கா இராணுவத்தின் மண்டைதீவு கடற்படையின் முகாமில் தரித்திருந்ததைக் கண்டுபிடித்ததுடன், மண்டைதீவு இராணுவ முகாமில் சோத னை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியையும் பெற்றிருந்தனர்.

   இந்நிலையில், குறித்த பகுதிக்கு செல்லவேண்டாம் என்று மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவ் உத்தரவின்படி குறித்த அதிரடி ப்படை முகாமிற்குள் புகுந்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொள்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அரியாலை சூட்டில் இராணுவத்தினர் மீது சந்தேகம் – காணொளி ஆதாரம் வெளியீடு ! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top