முள்ளிவாய்க்கால் மீனவர்களை புலனாய்வு பிரிவினர் விசாரணை
முள்ளிவாய்க்காலில் உள்ளூர் மீனவர்கள் இலங்கைப் புலனாய்வு பிரிவினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியின் மேற்கு கடற்கரையில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதியைவிட்டு வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையை மீனவர்கள் முன்வைத்துள்ள நிலையில் இவ்வாறு விசாரணைகள் தொடர்வதாக தெரியவந்துள்ளது.
உழவு இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித்தொழில் தடைசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கடந்த 25 ஆம் திகதி வட மாகாணசபை உறுப்பினர் ஒருவரிடம் இந்த மீனவர்கள் கையளித்துள்ளனர்.இதனை தொடர்ந்து இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.








