Breaking News

உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவது எவ்வாறு?

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு தாக்­க­லுக்­கு­ரிய தினங்கள் விரைவில் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளன. கட்­சிகள் தற்­போது தேர்­த­லுக்கு மும்­மு­ர­மாக தயா­ரா­கி­வ­ரு­கின்­றன. இம்­முறை தேர்­த­லா­னது புதிய முறையில் நடை­பெ­ற­வுள்­ள­மையே விசேட அம்­ச­மா­க­வுள்­ளது.

இந்­நி­லையில் புதிய வட்­டாரம் மற்றும் விகி­தா­சார முறை என கலப்பு முறையில் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ள­மையே விசேட அம்­ச­மாகும். அதன்­படி தேர்தல் எவ்­வாறு நடக்கும்? இரண்டு முறை­க­ளிலும் எவ்­வாறு பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்? வாக்­கா­ளர்கள் எவ்­வாறு வாக்­க­ளிப்­பது? இது­போன்ற கேள்­விகள் தற் போது சமூ­கத்தில் எழுந்­து­கொண்­டி­ருக்­கின் ­றன. எனவே இது தொடர்­பி­லான ஒரு விப­ரத்தை வாச­கர்­க­ளுக்கு வழங்­க­வேண்டும் என்­பதால் மேல­திக தேர்­தல்கள் ஆணை­யாளர் மொஹ­மட்­டுடன் ஒரு சந்­திப்பை நடத்­தினேன். மிகவும் தெளிவான முறையில் அவர் இந்த விட­யங்­க­ளுக்­கான விளக்­கங்­களை அளித்தார். பல்­வேறு கட்­டங்­க­ளாக அவர் இந்த விப­ரங்­களை வழங்கினார். அவற்றை உங்­க­ளுக்­காக தரு­கின்றோம்.

கட்­டுப்­பணம்

வேட்­பு­மனு தாக்­க­லுக்­கான காலப்­ப­கு­தியின் இறு­தித்­தி­னத்­திற்கு முதல்நாள் 12 மணிக்கு முதல் அர­சியல் கட்­சி­களும் சுயேட்­சைக்­கு­ழுக்­களும் தங்­க­ளது கட்­டுப்­ப­ணத்தை செலுத்­த­வேண்டும். இம்­முறை ஒரு புதிய ஏற்­பாடு அமு­லுக்கு வரு­கி­றது. அதா­வது 2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க உள்­ளூ­ராட்சி தேர்தல் திருத்த சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் சுயேட்­சைக்­கு­ழுக்கள் மட்­டு­மன்றி அர­சியல் கட்­சி­களும் தமது வேட்­பா­ளர்­க­ளுக்­காக கட்­டுப்­ப­ணத்தை செலுத்­த­வேண்டும்.

சுயேட்­சைக்­குழு சார்பில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் ஒருவர் 5000 ரூபா வீதம் கட்­டுப் பணம் செலுத்­த­வேண்டும். அர­சியல் கட்­சி­களின் வேட்­பாளர் ஒரு­வ­ருக்கு 1500 ரூபா வீதம் கட்­டுப்­பணம் செலுத்­த­வேண்டும். இம்­முறை இது கலப்பு தேர்தல் முறை என்­ப­தனால் வட்­டா­ர­மு­றையில் போட்­டி­யி­டு­ப­வர்­களும் பிர­தேச வாரி பட்­டியல் முறையில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களும் கட்­டுப்­ப­ணத்தை செலுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது.

இலங்­கையில் செல்­லு­ப­டி­யாகும் நாணயம் ஊடாக இந்த கட்­டுப்­பணம் செலுத்­தப்­ப­ட­வேண் டும். அர­சியல் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் கட்­சியின் செய­லாளர் அல்­லது அவரால் அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்ட முக­வ­ரினால் கட்­டுப்­பணம் செலுத்­தப்­ப­ட­வேண்டும். சுயேட்­சைக்­கு­ழு­வாயின் சுயேட்­சைக்­கு­ழுவின் தலைவர் அல்­லது அவ­ரினால் அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்ட முக­வ­ரினால் கட்­டுப்­பணம் செலுத்த முடியும். கட்­டுப்­பணம் செலுத்­திய அர­சியல் கட்­சிகள் அல்­லது சுயேட்­சைக்­கு­ழுக் கள் தேர்­த­லில்­ஒரு ஆச­னத்­தை­யேனும் பெற்­றுக்­கொண்டால் அவர்­களின் கட்­டுப்­பணம் மீள் செலுத்­தப்­படும். வேட்­பு­மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டாலும் கட்­டுப்­பணம் மீள் செலுத்­தப்­படும்.

வேட்­பு­ம­னுத்­தாக்கல்

இம்­முறை வேட்­பு­ம­னுக்கள் ஒரே வேட்­பு­ம­னுப்­பத்­தி­ரத்தில் இரண்டு பகு­தி­க­ளாக தாக்கல் செய்­யப்­ப­ட­வேண்டும். அதா­வது ஒரே பத்­தி­ரத்தில் இரண்டு வேட்­பு­மனு பகு­திகள் இருக்கும். வேட்­பு­ம­னுப்­பத்­தி­ரத்தின் முத­லா­வது பகு­தி­யா­னது வட்­டா­ரங்­களில் போட்­டி­யி­டு­கின்ற வேட்­பா­ளர்­க­ளுக்­கு­ரி­ய­தாகும். நாம் தற்­போது வேட்­பு­மனு செயற்­பாடு தொடர்பில் கொழும்பு மாந­க­ர­ச­பையை உதா­ர­ண­மாக எடுத்து நிலை­மையை ஆராய்வோம்.

அதா­வது புதிய தேர்தல் முறை­மை­யின்­படி உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வட்­டார எல்லை நிர்­ண­யங்கள் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே இந்த வட்­டா­ரங்­க­ளுக்கு வேட்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. கொழும்பு மாந­க­ர­ச­பையை எடுத்­துக்­கொள்வோம்.

கொழும்பு மாந­க­ர­ச­பையில் தனி அங்­கத்­த­வர்கள் தெரிவு செய்­யப்­படும் வட்­டா­ரங்கள் 31 ஆக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் அந்த 31 வட்­டா­ரங்­க­ளுக்கும் கட்­சிகள் மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்கள் சார்பில் 31 வேட்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும்.

அடுத்­த­தாக கொழும்பு மாந­க­ர­ச­பையில் 13 வட்­டா­ரங்­க­ளுக்கு இருவர் வீதம் தெரி­வு­செய்­யப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. அதா­வது இந்த 13 வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து இரண்டு பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். அதற்கும் இந்த 13 வட்­டா­ரங்­க­ளுக்கும் இருவர் வீதம் 26 பேரை அர­சியல் கட்­சிகள், சுயேட்­சைக்­கு­ழுக்கள் வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றக்­க­வேண்டும்.

அதே­போன்று கொழும்பு மாந­க­ர­ச­பையில் ஒரு வட்­டா­ரத்தில் மூவர் தெரிவு செய்­யப்­ப­டக்­கூ­டிய வகையில் மூன்று வட்­டா­ரங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றுக்கு ஒரு­வட்­டா­ரத்­திற்கு மூவர் வீதம் ஒன்­பது வேட்­பா­ளர்­களை அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்கள் நிய­மிக்­க­வேண்டும்.

அந்­த­வ­கையில் ஒரு அர­சியல் கட்சி அல்­லது சுயேட்­சைக்­கு­ழு­வா­னது கொழும்பு மாந­க­ர­ச­பையின் வட்­டா­ரங்­க­ளுக்கு 31 + 26 + 9 என்­ற­வ­கையில் 66 வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­க­வேண்டும். இந்த 66 பேரும் வேட்பு மனுப்­பட்­டி­யலில் முதல் பகு­தியில் கட்­சிகள் மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்­க­ளினால் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். ஒன்று கூட குறைய முடி­யாது. இந்த 66 வேட்­பா­ளர்­களை 60 வீத­மா­ன­வர்கள் என எடுத்­துக்­கொண்டால் மீதம் 40 வீதமே விகி­தா­சார முறையில் தெரி­வு­செய்­யப்­ப­டு­வார்கள். உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் 60 வீத தொகுதி முறை­மை­யிலும் 40 வீதம் விகி­தா­சார முறை­யிலும் நடை­பெ­ற­வுள்­ளமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

அது ஒரு முறை­மையின் அடிப்­ப­டையில் கணக்­கி­டப்­பட்டு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு வழங்­கப்­படும். அதா­வது ஒரு உள்­ளூ­ராட்சி மன்­றத்தில் 60 வீத­மான வட்­டார முறை­மையில் எத்­த­னைபேர் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்? விகி­தா­சார முறை­மையில் எத்­த­னைபேர் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள் என்­பது ஒவ்­வொரு உள்­ளூ­ராட்­சி­மன்றம் தொடர்­பா­கவும் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அத­னைத்தான் அண்­மையில் அமைச்சர் பைஸர் முஸ்­தபா வர்த்­த­மானி அறி­வித்­தலில் வெளி­யிட்­டி­ருந்தார்.

அந்த சட்­டத்தின் படி கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு விகி­தா­சா­ர­மூ­ல­மாக 44 உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வேண்டும். எனவே இந்த 44 பேருடன் இன்னும் மூன்­று­பேரை கூடுத­லாக சேர்த்து கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு ஒவ்­வொரு கட்சி மற்றும் சுயே­ச்­சைக்­குழு சார்பில் 47 பேர் வேட்­பா­ளர்­க­ளாக தாக்கல் செய்­யப்­ப­ட­வேண்டும்.

அந்த வகையில் கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு வட்­டார முறை­மையில் 66 மற்றும் விகி­தா­சார முறை­மையில் 47 பேரு­மாக 113 வேட்­பா­ளர்கள் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்கள் சார்பில் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். அதன்­படி வட்­டார முறை­மையில் 66 பேரும் விகி­தா­சார முறை­மையில் 44 பேரு­மாக 110 பேர் கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

அர­சியல் கட்­சி­யொன்று கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு வேட்­பு­ம­னுத்­தாக்கல் செய்­யப்­ப­டும்­போது ஒரு வேட்­பா­ள­ருக்கு 1500 ரூபா வீதம் 1 இலட்­சத்து 69 ஆயி­ரத்து 500 ரூபாவை கட்­டுப்­ப­ண­மாக செலுத்­த­வேண்டும். சுயேட்­சைக்­கு­ழுவைப் பொறுத்­த­வ­ரையில் ஒரு வேட்­பா­ள­ருக்கு 5000 ரூபா வீதம் 5 இலட்­சத்து 65 ஆயிரம் ரூபா கட்­டுப்­ப­ண­மாக செலுத்­த­வேண்டும்.

பெண் வேட்­பா­ளர்கள்

இதற்­கி­டையே புதிய சட்­ட­மூ­லத்­திற்கு அமை­வாக ஒரு கட்­சியின் சார்பில் அல்­லது சுயேட்­சைக்­கு­ழுவின் சார்பில் இரண்டு பகு­தி­களைக் கொண்ட இந்த வேட்­பு­ம­னுப்­பத்­தி­ரத்தில் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்­டிய பெண் வேட்­பா­ளர்­களின் எண்­ணிக்கை வரை­யறை செய்­யப்­பட்­டுள்­ளது. அதா­வது கொழும்பு மாந­க­ர­ச­பையை எடுத்­துக்­கொண்­டோ­மானால் வட்­டார முறை­மூலம் 66 பேர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில் அதில் 11 பேர் கட்­டாயம் பெண் வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றக்­கப்­ப­ட­வேண்டும்.

அதே­போன்று விகி­தா­சார முறை­மையில் கள­மி­றக்­கப்­படும் வேட்­பா­ளர்­களில் 50 வீத­மா­ன­வர்கள் பெண்­க­ளாக இருக்­க­வேண்டும். அதா­வது கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு விகி­தா­சாரம் மூலம் 47 வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­க­வேண்­டிய நிலையில் அதில் 23 பேர் பெண்­க­ளாக இருக்­க­வேண்­டி­யது சட்­ட­மாகும்.

அப்­ப­டி­யாயின் மொத்­த­மாக கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு 66+47 என்­ற­வ­கையில் 113 வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்ள நிலையில் அதில் 34 பேர் பெண்­க­ளாக இருக்­க­வேண்டும் என்­பது சட்டம். இந்த விகிதம் மாறி­ய­மைந்தால் வேட்­பு­மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டு­விடும் என்­பதை மிகவும் தெளிவாக குறிப்­பி­டு­கின்றோம்.

வேட்பு மனுக்கள் நிரா­க­ரிக்­கப்­படல்

இங்கு நாம் வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­படும் சந்­தர்ப்­பங்­க­ளையும் மக்­க­ளுக்கு எடுத்துக் கூற வேண்­டி­யுள்­ளது. புதிய சட்­டத்­தின்­படி இரண்டு முறை­களில் வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­படும். அதா­வது முழு­மை­யான வேட்­பு­மனு நிரா­க­ரிக்­கப்­ப­டு­கின்­றமை ஒரு சந்­தர்ப்­ப­மா­கவும் ஒரு வேட்­பு­ம­னுவில் ஒரு வேட்­பாளர் மட்டும் நிரா­க­ரிக்­கப்­ப­டு­கின்­றமை மற்­று­மொரு சந்­தர்ப்­ப­மா­கவும் சட்­டத்­தினால் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளன.

முழு வேட்பு மனுவும் நிரா­க­ரிக்­கப்­ப­டுதல்

வேட்­பு­மனு முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­படும் சந்­தர்ப்­பங்­களை முதலில் பார்ப்போம். கொழும்பு மாந­க­ர­ச­பையை உதா­ர­ண­மாக எடுத்­தோ­மானால் 113 வேட்­பா­ளர்கள் மொத்­த­மாக வேட்பு மனுவின் இரண்டு பகு­தி­க­ளிலும் உள்­ள­டக்­கப்­ப­டா­விடின் குறித்த வேட்­பு­மனு முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­படும்.

தேவை­யான பெண் பிர­தி­நி­தித்­து­வங்கள் குறிப்­பிட்ட வீதத்தில் இடம்­பெ­றா­விடின் வேட்­பு­மனு முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­படும். அதா­வது கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு வட்­டா­ர­மு­றையில் 11 பெண் வேட்­பா­ளர்­களும் விகி­தா­சார முறையில் 23 பெண் வேட்­பா­ளர்­களும் நிய­மிக்­கப்­ப­டா­விடின் வேட்­பு­மனு முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­படும்.

கட்­டுப்­பணம் உரிய முறையில் செலுத்­தப்­ப­டா­விடின் அப்­போதும் முழு­மை­யான வேட்­பு­ம­னுவும் நிரா­க­ரிக்­கப்­படும்.

அடுத்­த­தாக அர­சியல் கட்­சி­யாக இருப்பின் செய­லா­ளரும் சுயேட்­சைக்­கு­ழு­வாக இருப்பின் அதன் தலை­வரும் கைச்­சாத்­தி­ட­வேண்டும். இல்­லா­விடின் முழு­மை­யாக வேட்­பு­மனு நிரா­க­ரிக்­கப்­படும். இவர்­களின் கையொப்­பத்தை ஒரு சமா­தான நீதிவான் முறை­யாக அத்­தாட்­சிப்­ப­டுத்த வேண்டும். இல்­லா­விடின் அப்­போதும் வேட்­பு­மனு முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­படும்.

வேட்­பு­ம­னுவை கட்­சி­யென்றால் செய­லா­ளரும், அல்­லது அவரால் அதி­காரம் அளிக்கப்­பட்ட முக­வரும், சுயேட்­சைக்­கு­ழு­வென்றால் அதன் தலை­வரும் தெரி­வத்­தாட்சி அலு­வ­ல­ரிடம் கைய­ளிக்­க­வேண்டும். இவர்­களைத் தவிர்த்து வேறு­யா­ரா­வது கைய­ளித்தால் அந்த வேட்­பு­மனு முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­படும்.

வேட்பு மனுவில் ஒருவர் மட்டும் நிரா­க­ரிக்­கப்­ப­டுதல்

தற்­போது தனிப்­பட்ட ரீதியில் வேட்­பா­ளர்­களின் வேட்­பு­மனு நிரா­க­ரிக்கும் சந்­தர்ப்­பத்தை பார்ப்போம். 113 வேட்­பா­ளர்­களும் வேட்­பு­ம­னுவில் கையொப்­ப­மி­ட­வேண்டும். அதில் ஒருவர் கையெ­ழுத்­தி­டா­விடின் அவ­ரு­டைய பெயர் மட்டும் வேட்­பு­ம­னு­வி­லி­ருந்து நிரா­க­ரிக்­கப்­படும். ஏனை­ய­வர்­க­ளுக்கு அதில் பாதிப்பு ஏற்­ப­டாது. அதே­போன்று இந்த நாடு இரண்­டாக பிள­வு­ப­டு­வ­தற்கு எதி­ராக வேட்­பாளர் ஒரு உறு­தி­யுரை செய்­ய­வேண்டும். அதனை வழங்­கத்­த­வ­றினால் அந்த வேட்­பாளர் மட்டும் நிரா­க­ரிக்­கப்­ப­டுவார்.

அந்த உறு­தி­யு­ரையை வழங்கி அதில் அவர் கையொப்­ப­மி­டா­விடின் அவ­ரு­டைய பெயர் மட்டும் நிரா­க­ரிக்­கப்­படும். அதே­போன்று கடந்த தேர்தல் முறையில் இளை­ஞர்கள் 40 வீதம் உள்­ளீர்க்­கப்­ப­ட­வேண்டும் என்ற சட்டம் இருந்­தது. இம்­முறை அது 30 வீத­மாக மாறி­யுள்­ளது. ஆனால் அது கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வில்லை. எனினும் ஒரு கட்சி தான் ஒரு இளை­ஞரைக் கள­மி­றக்­கு­வ­தாக குறிப்­பிட்டால் அந்த வேட்­பு­ம­னுவில் பிறப்­புச்­சான்­றி­த­ழிலில் அவர் இளை­ஞ­ராக இருக்­காவிடின் (வயது மட்டம் சட்­டத்தில் உள்­ளது) அவர் மட்டும் வேட்­பு­ம­னு­வி­லி­ருந்து நிரா­க­ரிக்­கப்­ப­டுவார். இத­னுடன் வேட்­பு­மனு விவ­காரம் முடி­வுக்கு வரு­கி­றது.

வாக்­க­ளிப்பு முறை

அடுத்­த­தாக வாக்­க­ளிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணி மற்றும் தெரிவு செய்யும் பணி என்­ப­வற்றைப் பார்ப்போம். வாக்­குச்­சீட்­டா­னது இது­வரை காலம் இருந்­த­தைப்­போன்று இருக்­காது. அதா­வது முதல் பகுதி மட்­டுமே இருக்கும். கீழ் பகுதி இருக்­காது. சரி­யாக கூறு­வ­தென்றால் வாக்­குச்­சீட்டில் வட்­டா­ரத்தில் போட்­டி­யிடும் கட்­சி­களின் பெயர்கள் (மும்­மொ­ழியில்), சின்­னங்கள், வாக்­க­ளிப்­ப­தற்­கான ஒரு வெற்­றுக்­கூடு ஆகி­யவை இருக்கும். கட்­சி­களின் பெயர்கள் சிங்­கள அக­ர­வ­ரி­சைப்­ப­டியே அமையும். கட்­சி­களின் பெயர்­க­ளுக்கு கீழ் சுயேட்­சைக்­கு­ழுக்­களின் இலக்­கங்­களும் இருக்கும்.

விருப்பு வாக்கு இல்லை

மாறாக விருப்­பு­வாக்­குக்­கான வெற்­றுக்­கூடோ, மற்றும் வேட்­பா­ளர்­களின் பெயர்­களோ வாக்­குச்­சீட்டில் இருக்­காது. இதன்­போது தன்­னு­டைய வட்­டா­ரத்தில் எந்­தக்­கட்­சியின் சார்பில் எந்­த­வேட்­பாளர் போட்­டி­யி­டு­கின்றார் என்­பது மக்­க­ளுக்குத் தெரியும். அது வாக்­க­ளிப்பு நிலை­யத்­துக்கு வெளி­யிலும் காட்­சிப்­ப­டுத்­தப்­படும். வாக்­காளர் அட்­டை­யிலும் இந்த விப­ரங்கள் சில வேளை­களில் வீடு­க­ளுக்கு அனுப்­பப்­படும். எனவே வாக்­கா­ளர்கள் இதன்­போது தான் விரும்­பிய கட்­சிக்கு அல்­லது சுயேட்­சைக்­கு­ழுவுக்கு மட்­டுமே வாக்­க­ளிக்­க­வேண்டும்.

வாக்கு எண்ணும் நிலை­யங்­க­ளாக மாறும் வாக்­க­ளிப்பு நிலை­யங்கள்

குறித்த வட்­டா­ரத்தில் ஒரு கட்­சிக்கு ஒரு வாக்­காளர் வாக்­க­ளிக்­கும்­போது அந்த கட்­சியின் சார்­பாக போட்­டி­யிடும் வேட்­பா­ள­ருக்கே அந்த வாக்கு செல்லும். வாக்­க­ளிப்பு முடிந்­ததும் மாலை 4.00 மணிக்கு பிறகு அனைத்து வாக்­க­ளிப்பு நிலை­யங்­களும் வாக்கு எண்ணும் நிலை­யங்­க­ளாக மாறி­விடும். மாலை 4.00 மணிக்கு பிறகு வாக்­குகள் எண்­ணப்­படும். காலையிலி­ருந்து மாலை வரை வாக்­க­ளிப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக இருந்­த­வர்கள் மாலை 4.00 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணும் உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக மாறி­வி­டுவர். அந்த இடத்­தி­லேயே வாக்­குகள் எண்­ணப்­படும்.

வட்­டார முடிவு உட­ன­டி­யாக அறி­விக்­கப்­படும்

அதன்­படி வாக்­குகள் எண்­ணப்­பட்டு அந்த வட்­டா­ரத்தில் எந்தக் கட்சி வெற்­றி­பெற்­றுள்­ளது என உயர் அதி­காரி அறி­விப்பார். அதன்­படி வெற்­றி­பெற்ற கட்­சியின் சார்பில் குறித்த வட்­டா­ரத்தில் போட்­டி­யிட்­டவர் வெற்­றி­பெற்­ற­தாக எடுத்­துக்­கொள்­ளப்­ப­டுவார். சில­வேளை ஒரு வட்­டா­ரத்­திற்கு இரண்டு மூன்று வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் உரு­வாக்­கப்­ப­டலாம். அப்­ப­டி­யான சந்­தர்ப்பம் வந்தால் அனைத்து வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளிலும் வாக்­குகள் எண்­ணப்­பட்டு ஒன்­றாக சேர்க்­கப்­பட்டு வெற்­றி­பெற்ற கட்சி அறி­விக்­கப்­படும்.

வட்­டா­ரத்­திற்­கான வாக்­குப்­பட்­டியல் உடைக்­கப்­படும் போது அதற்குள் அந்த வட்­டா­ரத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள தபால் வாக்­கு­களும் கொட்­டப்­பட்டு முழு­மை­யா­கவே எண்­ணப்­படும். இதன்­படி மாந­க­ர­ச­பையில் வட்­டா­ரங்­க­ளுக்­கான வெற்­றிகள் அறி­விக்­கப்­படும். இதன்­படி வெற்­றி­பெற்ற 66 பேரும் அறி­விக்­கப்­ப­டு­வார்கள்.

விகி­தா­சார தெரிவு

எஞ்­சிய 44 பேரை இப்­போது நாம் விகி­தா ­சார முறை­மையில் தெரி­வு­செய்­ய­வேண்­டி­யுள்­ளது. தற்­போது கொழும்பு மாந­க­ர­ச­பையில் 31+13+3 என்­ற­வ­கையில் 47 வட்­டா­ரங்கள் உரு­வாக்­கப்­பட்டு அவற்­றுக்­காக 66 பேர் தெரிவு

செய்­யப்­ப­டு­வார்கள் என்­பது உங்­க­ளுக்குத் தெரியும். எனினும் விகி­தா­சார முறை­மையில் 44 பேர் தெரி­வு­செய்­யப்­ப­டு­வ­தற்­காக இந்த 47 வட்­டா­ரங்­க­ளுக்கும் அளிக்­கப்­பட்ட வாக்­குகள் முழு­மை­யாக எண்­ணப்­படும்.

கொழும்பு மாந­க­ர­ச­பைக்­கான இந்த நட­வ­டிக்கை ஒரு பாட­சா­லையில் இடம்­பெறும். உதா­ர­ண­மாக கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு செல்­லு­ப­டி­யான 220000 வாக்­குகள் கிடைத்­துள்­ளன என வைத்­துக்­கொள்வோம். இந்த 220000 வாக்­கு­களில் மொத்த உறுப்­பி­னர்­க­ளான 110 பிரித்தால் 2000  என விடை­வரும்.

இப்­போது 47 வட்­டா­ரங்­களில் 'ஏ' என்ற கட்சி 25 வட்­டா­ரங்­களை வென்­றுள்­ளது என்றும் பி என்ற கட்சி 15 வட்­டா­ரங்­க­ளையும் சி என்ற கட்சி 7 வட்­டா­ரங்­க­ளையும் வெற்­றி­பெற்­றுள்­ளது என்றும் உதா­ர­ணத்­திற்கு வைத்­துக்­கொள்வோம். அதன்­படி 25 வட்­டா­ரங்­களில் வெற்­றி­பெற்ற ஏ என்ற கட்­சிக்கு 30 உறுப்­பி­னர்கள் கிடைத்­துள்­ளார்கள் என்றும் 15 வட்­டா­ரங்­களை வென்ற பி என்ற கட்­சிக்கு 24 உறுப்­பி­னர்கள் கிடைத்­துள்­ளார்கள் என்றும் ஏழு வட்­டா­ரங்­களை வென்ற சி என்ற கட்­சிக்கு 12 பேர் கிடைத்­துள்­ளார்கள் என்றும் வைத்­துக்­கொள்வோம். ( சில தொகு­தி­களில் இரண்டு அல்­லது மூன்று பேர் தெரிவு செய்­யப்­ப­டு­வதால் வட்­டா­ரங்­க­ளை­விட உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கலாம்) இது உதா­ரணம் மட்­டு­மே­யாகும். உண்­மை­யாக வீதங்கள் மாறலாம்.

இதில் 47 வட்­டா­ரங்­களில் ஏ,பி, சி. என்ற கட்­சிகள் பெற்­றுக்­கொண்ட முழு வாக்­கு­களும் எண்­ணப்­படும். இங்கு ஏ என்ற கட்சி 1 இலட்­சத்து 10 ஆயிரம் வாக்­குகள் எடுத்­துள்­ளது என்று வைத்­துக்­கொள்வோம். அதனை முதலில் பெற்ற விடை­யான இரண்­டா­யி­ரத்தால் பிரித்தால் அந்த கட்­சிக்கு 55 உறுப்­பி­னர்கள் கிடைப்­பார்கள். அதில் ஏ என்ற அந்­தக்­கட்சி ஏற்­க­னவே வட்­டா­ர­மு­றை­மையில் 30 உறுப்­பி­னர்­களைப் பெற்­று­விட்­டதால் மீதி 25 உறுப்­பி­னர்கள் விகி­தா­சார முறையில் கிடைப்­பார்கள்.

பி என்ற கட்சி 80 ஆயிரம் வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தால் அவர்­க­ளுக்கு 40 உறுப்­பி­னர்கள் கிடைப்­பார்கள். அதில் பி என்ற கட்சி ஏற்­க­னவே 24 உறுப்­பி­னர்­களை வட்­டார முறையில் பெற்று விட்­டதால் அவர்­க­ளுக்கு விகி­தா­சார முறை­மையில் 16உறுப்­பி­னர்கள் கிடைப்­பார்கள். சீ என்ற கட்சி 26000 ஆயிரம் வாக்­கு­களைப் பெற்று அதனை இரண்­டா­யி­ரத்தால் பிரித்தால் 13 உறுப்­பி­னர்­கள் கிடைப்­பார்கள். அந்தக் கட்சி ஏற்­க­னவே வட்­டார முறையில் 12 உறுப்­பி­னர்­களை பெற்­று­விட்­டதால் விகி­தா­சார முறை­மையில் ஒரு உறுப்­பி­னரைப் பெற்­றுக்­கொள்­ளலாம். விகி­தா­சார முறையில் 44 உறுப்­பி­னர்­களே கொழும்பு மாந­கர சபைக்கு உள்­ளனர். இந்­நி­லையில் ஏ பி மற்றும் சி என்ற கட்­சிகள் பெற்ற ஆச­னங்­களை தவிர்த்து எஞ்­சி­யுள்ள 2 ஆச­னங்­களை குறைந்த ஆச­னங்­களை வென்ற கட்­சிகள் பெற்­றுக்­கொள்ளும். இந்த இடத்­தில்தான் சிறிய கட்­சி­க­ளுக்­கான சந்­தர்ப்பம் உறு­தி­செய்­யப்­படும். அதன்­படி விகி­தா­சார முறை­மையில் போட்­டி­யிட்ட கட்­சி­க­ளுக்கு எத்­தனை உறுப்­பி­னர்கள் கிடைத்­துள்­ளார்கள் என்­பதை நாங்கள் அறி­விப்போம். அவர்கள் அதன்­படி உறுப்­பி­னர்­களை எமக்கு அறி­விக்­கலாம். அதன்­படி விகி­தா­சார வேட்­பு­ம­னுப்­பட்­டி­யலில் பெய­ரி­டப்­பட்­ட­வர்கள் அல்­லது வட்­டா­ர­மு­றையில் தோற்­ற­வர்கள் கூட நிய­மிக்­கப்­ப­டலாம்.

பெண் பிர­தி­நி­தித்­துவம்

இவ்­வாறு கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு 110 உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­டு­வார்கள். ஆனால் இங்கு பெண்­களின் பிர­தி­நி­தித்­ துவம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். பெண்கள் 25 சதவீதம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது சட்டம். அந்தவகையில் கொழும்பு மாநகர சபையை எடுத்துக் கொண்டால் குறைந்தது 110 பேரில் 27 பேராவது பெண்களாக இருக்கவேண்டும். இங்கு மொத்தமாக பெறப்பட்ட 220000 வாக்குகளிலிருந்து 20 வீதத்திற்கு குறைவாக பெற்ற கட்சிகளின் வாக்குகளை கழித்துவிட வேண்டும். அவர்களுக்கு பெண்களை நியமிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது. அப்படி பார்க்கும் போது உதாரணமாக இரண்டு இலட்சம் வாக்குகளே கவனத்தில் கொள்ளப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

அதனை இந்த 27 பெண் உறுப்பினர்களுக்காக வீதத்தினால் பிரித்தால் கிட்டத்தட்ட 7500 என்ற விடை வரலாம். இப்போது அந்த 7500 என்ற தொகையினால் ஏ பி மற்றும் சி என்ற கட்சிகள் பெற்ற வாக்குகளைப் பிரிக்க வேண்டும். உதாரணமாக ஏ என்ற கட்சி 1 இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது. அதனை 7500 ரூபாவால் பிரித்தால் ஒரு தொகை வரும்.

உதாரணமாக ஏ என்ற கட்சிக்கு 14உம், பி என்ற கட்சிக்கு 8 உம் சி. என்ற கட்சிக்கு 3 உம் விடைகளாக கிடைத்துள்ளன என்று வைத்துக்கொள்வோம். இதுதான் குறித்த கட்சிகள் சார்பாக கொழும்பு மாநகரசபைக்கு செல்லவேண்டிய பெண் பிரதிநிதித்து வங்களின் எண்ணிக்கையாக அமையும். தொடர்ந்து இந்தக்கட்சிகளின் வட்டாரங்களில் எத்தனை பெண்கள் வெற்றிபெற்றுள்ளார்கள் என்று பார்க்கவேண்டும். உதாரண மாக ஏ என்ற கட்சி வட்டார முறையில் ஐந்து பெண் உறுப்பினர்களைப் பெற்றிருந்தால் மிகுதி 9 பெண் உறுப்பினர்களை விகிதாசார முறையில் தெரிவுசெய்யப்படவேண்டியுள்ளது. அதாவது ஏ என்ற கட்சியானது 9 பெண் உறுப்பினர்களை தனக்கு விகிதாசாரம் மூலம் கிடைத்த 25 உறுப்பினர்களிலிருந்து மாநகர சபைக்கு அனுப்பவேண்டும்.

இந்த முறைமையையே அனைத்துக் கட்சிகளும் செய்யவேண்டும். ஒரு வேளை ஒரு கட்சியின் சார்பில் வட்டார முறையில் ஒரு பெண் பிரதிநிதியும் வெற்றிபெறாவிடின் இங்கு விகிதாசாரத்தின்படி விகிதாசார முறையிலி ருந்து வெற்றிபெற்றவர்களிலிருந்து பெண்களை தெரிவு செய்து அனுப்ப வேண்டியது கட்டாயமாகும்.

கொழும்பு மாநகர சபையை பொறுத்தவரை ஒரு கட்சி வட்டார மற்றும் விகிதாசார முறை மைகளில் 56 உறுப்பினர்களைப் பெற்றால் மேயரையும் பிரதி மேயரையும் நியமனம் செய்யலாம். எனினும் கொழும்பு மாநகர சபையில் எந்தவொரு கட்சியும் 56 உறுப்பி னர்களைப் பெறாவிடின் கூட்டாட்சியே நடை பெறும்.

-ரொபட் அன்­டனி-