Breaking News

37வது ஜெனீவா தீர்மானத்திற்கு சிங்கள பிரதி நிதிகள் பெரும் எதிர்ப்பு.! (காணொளி)

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட சிங்கள பிரதிநிதிகள் ஜெனீவா தீர்மானத்திற்கு தமது எதிர்ப்பை தெரி வித்துள்ளனா். 

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விசுவாசியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தலை மையிலான உலக சிங்கள அமை ப்பின் பிரதி நிதிகளே இந்த எதிர்ப்பை நேற்றைய அமர்வில் வெளிப்படுத்தி யுள்ளனா். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய அமர்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது இளைய சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகி யோரின் சார்பில் கலந்துகொண்ட அவர்களது விசுவாசிகளான முன்னாள் கட ற்படை உயரதிகாரியான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கடுமையாக விமர்சித்துள்ளனா்.

எந்தவித அடிப்படையும் அற்ற வெறும் குற்றச்சாட்டுக்களையும் வதந்திகளை யும் அடிப்படையான அறிக்கைகளை ஆதாரமாகப் பயன்படுத்தி ஸ்ரீலங்கா விற்கு எதிராக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டு அதனை அடிப்படையா கக் கொண்டு பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதன் ஊடாக ஐ.நா மனித உரி மைகள் பேரவை அப்பட்டமாக ஸ்ரீலங்காவின் மனித உரிமைகளை மீறியுள்ள தாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளாா். 

ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் அமைப்பான வியத்மக அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அநு ராதா யாம்பத உரையாற்றுகையில் ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அணு சரணை வழங்கியதன் ஊடாக தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையி லான ஸ்ரீலங்கா அரசாங்கம் நாட்டிற்கும் நாட்டை மீட்ட படையினருக்கும் துரோகம் இழைத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனா்.