Breaking News

பிரதமருக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு வாக்களிக்கும் - இசுறு தேவப்பிரிய.! (காணொளி)

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஒருவர் பிரதமராக நியமிப்பதற்கு தாங்களும் விருப்பம் தெரி விப்பதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினரும், மேல்மாகாண சபை முதல மைச்சருமான இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். 

பிரதமருக்கு எதிரான நம்பிக்கை யில்லா தீர்மானத்திற்கு தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் ஆதரவும் கிடை க்கவுள்ளதாக தகவல் வெளியாகியி ருப்பதாக விவரித்துள்ளாா்.

 மேல்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பி னர்கள் இன்று வியாழக்கிழமை மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய வுக்கு முன்பாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனா். 

இதனைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் தங்களது கடமைகளைப் பொறுப்பேற்பதற்கான அதிகாரக் கடிதங்களை முதலமைச்சரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை யில்லா தீர்மானம் மீது அடுத்த மாதம் 4ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவிக்க தீர்மானித்தி ருப்பதாக தனக்கு அறியக்கிடைத்திருப்பதாக மேல்மாகாண சபை முதலமை ச்சருமான இசுறு தேவப்பிரிய ஊடகங்களிடம் தெரிவித்தார். “அப்படியொரு தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது.

எதிர்காலத்தில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்ட மைப்பும் ஆதர அளிக்கவுள்ளதாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது” என்றார். இதேவேளை பிரதமர் ரணிலுக்கு எதிரான பிரேரணை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் சிறந்த தீர்மானம் ஒன்றை எடுக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளாா். 

“பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக கட்சியின் தீர்மானம் இன்னும் சிலதினங்களில் தெரியவரும். இந்த பிரேரணையில் யார் கையெழுத்திட்டுள்ளனர் என்பது தெரிய வந்ததைப் போன்று யார் எதிர்கால த்தில் கையெழுத்து இடுவார்கள் என்பது மக்களுக்குத் தெரியவரும். 

தற்போதைய நிலையில் கடந்த தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் மாற்றமொன்று ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கி றது. குறிப்பாக பாலித்த ரங்கே பண்டார போன்றவர்களே இந்த நம்பிக்கையி ல்லா தீர்மானம் தொடர்பான பேச்சை ஆரம்பித்தனர். நாடாளுமன்றத் தேர்த லில்கூட தனியாட்சியை அமைப்பதற்கு மக்கள் எந்தக் கட்சிக்கும் அதிகாரம் வழங்கவில்லை.

எனவே எதிர்காலத்தில் இந்த பிரேரணை தொடர்பாக கட்சி சரியான முடிவொ ன்றை எடுக்கும். நிச்சயமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒருவருக்கு பிர தமர் பதவி வழங்கப்படுமாயின் அதற்கு நாங்களும் விருப்பம் என்பதே எமது கருத்தாகும்”எனத் தெரிவித்துள்ளாா்.