கண்டி வன்முறை ; மஹிந்த அணியின் பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில்! (காணொளி) - THAMILKINGDOM கண்டி வன்முறை ; மஹிந்த அணியின் பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில்! (காணொளி) - THAMILKINGDOM

 • Latest News

  கண்டி வன்முறை ; மஹிந்த அணியின் பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில்! (காணொளி)

  கண்டி - திகன பிரதேசத்தில் நடை பெற்ற வன்முறைகள் கைது செய்ய ப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்ன ணியைச் சேர்ந்த குண்டசாலை பிர தேச சபை உறுப்பினர் உட்பட இருவ ருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிற ப்பிக்கப்பட்டுள்ளது. 

  இதற்கமைய இவர்கள் இருவரையும் எதிர்வரும் இரண்டாம் திகதிவரை விள க்கமறியலில் வைக்குமாறு தெல் தெனிய நீதவான் நீதிமன்றம் இன்று வியா ழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

  கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய பிரதேசத்தில் பெரும்பான்மையித்தைச் சேர்ந்த ஒருவரை முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்று படுகொலை செய்த தைத் தொடர்ந்து கடந்த 5ஆம் திகதி திகன, கட்டுகஸ்தோட்டை, அக்குறனை மற்றும் பூஜாப்பிட்டிய பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன.

  இதன்போது வீடுகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 46 வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டதோடு 4 மதஸ்தலங்களும் சேதப்படுத்தப்ப ட்டன. கலவரத்தின்போது இருவர் உயிரிழந்ததுடன் 11 பேர்  காயமடை ந்தனர். 

  மேலும் கலவரத்திலும், தாக்குதல்களிலும் ஈடுபட்ட சந்தேகத்தில் 146 பேர் வரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அதேவேளை, தொடர்ந்தும் 4 தின ங்களாக பொலிஸ் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

  இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி யின் குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்று கைதாகியுள்ளாா். 

  திகன ரஜவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சமந்த பெரேரா எனப்படும் அரலிய சமந்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினா் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கண்டி வன்முறை ; மஹிந்த அணியின் பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில்! (காணொளி) Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top