சாவகச்சேரி இந்துக்கல்லூரியைச் சேர்ந்த மாணவன் சாதனை! - THAMILKINGDOM சாவகச்சேரி இந்துக்கல்லூரியைச் சேர்ந்த மாணவன் சாதனை! - THAMILKINGDOM
 • Latest News

  சாவகச்சேரி இந்துக்கல்லூரியைச் சேர்ந்த மாணவன் சாதனை!

  கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியை சேர்ந்த ஏ. பவித்திரன் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 4.7 மீற்றர் உயரம் பாய்ந்து போட்டி சாதனையை நிலை நாட்டியுள்ளாா்.  

  மேலும் மகளிருக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 32 வருடங்களு க்குப் முன்னர் நிலைநாட்டப்பட்ட சாத னையை ராஜகிரிய கேற்வே சர்வதேச பாட சாலையை சேர்ந்த சலின்டா யென்சனா, தனது புதிய போட்டி சாதனையின் மூலம் முறியடித்துள் ளார். 

  இதேவேளை, இப்பாகமுவ மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வீராங் கனை பி.பி.ஐ.என்.பல்லேகம 16 வயதுக்கு உட்பட்ட உயரம் பாய்தல் போட்டி யில் சாதனை நிலை நாட்டியுள்ளார். 

  16வயதுக்கு உட்பட்ட 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஜனாதிபதி பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த காவிந்தி சஞ்சனா எதிரிசிங்ஹ போட்டி சாதனை நிலை நாட்டியுள்ளார். அக்குரம்பட வீரகெப்பெட்டிபொல கல்லூரியை சேர்ந்த அருண தர்ஷன 20 வயதுக்கு உட்பட்ட 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும், கொழும்பு மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தை சேர்ந்த சச்சின் நிலக்சா பெரேரா 23 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

  லங்கா லயன்ஸ் விளையாட்டு கழகத்தை சேர்ந்த எம்.எஸ்.எம். சஃபான் 23 வயதிற்கு உட்பட்ட 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் சாதனை நிலைநாட்டினார். வுளல ஏ ரத்னாயக்க கல்லூரியை சேர்ந்த கே.எம்.கன்னங்கர 3 ஆயிரம் மீற்றர் தடை தாண்டி ஓடும் போட்டியிலும், களுத்துறை மாவட்ட மெய்வல்லுனர் சங் கத்தை சேர்ந்த பூர்ணிமா ஜயமாலி குணரத்ன 23 வயதுக்கு உட்பட்ட மகளி ருக்கான உயரம் பாய்தல் போட்டியிலும் போட்டி சாதனை நிலை நாட்டியுள் ளனர்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சாவகச்சேரி இந்துக்கல்லூரியைச் சேர்ந்த மாணவன் சாதனை! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top