Breaking News

டிசம்பரில் மாகாணசபைத் தேர்தல் நடாத்துவதாக – மஹிந்த தேசப்பிரிய.!

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்பு நடத்த வுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு நான்கு மாற்றுவழிகள் உள்ளன. இந்த நான்கு வழிகளில் ஒன்றைத் தெரிவு செய்து நாடாளு மன்றம் அங்கீகரிக்குமாயின் ஏற்க னவே கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகள் மற்றும் எதிர்வரும் செப்டெம்பரில் முடியவுள்ள மூன்று மாகாண சபைகள் உள்ளடங்கலாக ஆறு மாகாண சபைகளின் தேர்தல்களை யும் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன் நடத்த முடியுமெனத் தெரிவித் துள்ளாா். 

நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் ஊடகச் செய்திகள் பற்றிய உறுதிப்படுத்தல் அறிக் கையை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு விவரித்துள்ளாா். 

மாகாணசபைத் தேர்தல்களை தேர்தல்கள் ஆணைக்குழு இழுத்தடிக்க வில்லையெனத் தெரிவித்த அவர், தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட்டு மக்களின் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஆணைக்குழு உள்ளதாகத் தெரிவித்துள்ளாா். 

13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகளின் நிர்வாகத்தை முன்னெ டுக்கும் உரிமை மக்கள் பிரதி நிதிகளுக்கே உள்ளது. நாடாளுமன்றில் முடி வொன்றை எடுத்து தேர்தலை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டால் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளதுடன்  கடந்த வருடம் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாண சபைகளின் ஆயுட்காலங்கள் முடிவடைந்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளனா்.