Breaking News

இராணுவம் யுத்தக் குற்றங்களைச் செய்யவில்லையென்கிறாா் கிழக்கு மாகாண ஆளுனர்!

யுத்த காலங்களில் இராணுவம் யுத்தக் குற்றங்களோ துஷ்பிரயோகங்களோ செய்ததில்லை என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளாா்.

நேற்று முன்தினம் (28-05-2018) திங்கட் கிழமை மாலை திருகோணமலை பிரட் றிக் வளாகத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண படைவீரர்களை கௌரவிக்கும் நிகழ்வின் போது இவ்வாறு தெரிவித்துள் ளாா்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்....... 

யுத்தகாலத்தின் போது நாட்டுக்காக தங்களது உயிரை அர்ப்பணித்த அவய வங்களை இழந்த படைவீரர்கள் என்றும் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும் அதன் அடிப்படையிலே ஒவ்வொரு வருடமும் படை வீரர் ஞாபகார்த்த தின நிகழ்வு கொண்டாடப்படுகிறது. 

நாம் இன்று சுதந்திரமாக நல்லிணக்காக ஒரே குடையின் கீழ் வாழ படை வீரர் களின் அர்ப்பணிப்பே காரணம். படை வீரர்கள் எவ்வித யுத்த மீறல்களையும் மேற்கொள்ளவில்லை.நாட்டு நலனை கருத்திற்கொண்டு கொடூர யுத்தத்தை நிறைவு செய்ய உயிரை பொருட்படுத்தாது விட்டுக்கொடுத்தமை என்றுமே போற்றப்பட வேண்டும். 

யுத்த காலத்தின் போது தான் நான் வெளி விவகார அமைச்சராக இருந்தேன். எனது காலப்பகுதியில் யுத்தம் நடைபெற்றது. அதே தருணம் இராணுவம் யுத் தக் குற்றம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதனை முற்றாக மறுக்கிறேன் அக்காலப்பகுதியில் அரசாங்கத்தின் நடவ டிக்கைகளை நன்கறிவேன் .எமது தாய் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்து யுத்தகாலத்தில் உயிரிழந்த படைவீரர்களை இந்த நேரத்தில் நினைவு கூரூ கிறேன். 

அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள் ளேன்.  கிழக்கு மாகாணத்தில் உள்ள படை வீரர்களுக்காக இந்த அரசாங்கம் மூலம் வாழ்வாதார உதவிகள் உட்பட ஏனைய பொருளாதார வசதிகளையும் செய்துகொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் வீட்டுத் திட்டங்கள் போன்றன வும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

சர்வதேச ரீதியாக படை வீரர்கள் எமது தாய் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர்களை இவ்வாறு கௌரவிக்கவேண்டும் நாட்டு நலன்களுக்காகவும் நாட்டை பாதுகாக்க ஒரே தேசம் ஒரே குரல் என்கின்றவாறு படைவீரர்கள் யுத்த காலத்திலும் சரி தற்போதும் செயற்பட்டுக் கொண்டிருகின்றார்கள். 

தாய் நாட்டை பாதுகாத்த அனைத்து படைவீரர்களுக்கும் மீண்டும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். கடந்த அரசு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக வும் தற்போதைய அரசாங்கம் மக்களிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி சம வாய்ப்புக்களுடனான அபிவிருத்தியை ஏற்படுத்த செயற்பட்டு வருகின் றது. 

யுத்தத்தில் உயிர்களை இழந்த படை வீரர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடி க்கைகளுக்கு தம்மால் முடியுமான உதவிகளினை வழங்குவதாவும் இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.சரத் அபேகுண வர்தன திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் ரணவிரு சேவா அதிகார சபையின் உப தலைவி திருமதி உபலாங்கனி மாலகமுவ கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள் முப்படை அதிகாரிகள் திரு கோணமலை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் படை வீரர்களின் பெற்றோர்கள் அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.